ரஷ்யா - உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்
ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்று வார காலமாக தொடரும் நிலையில், ரஷ்யப் படைகளால் நகருக்கு வெளியே உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டதை அடுத்து, கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செவ்வாயன்று மார்ச் 17 வரை 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோவை மேற்கோள் காட்டி தி கிவ் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
"தலைநகரம் கிவ் உக்ரைனின் இதயம், அது பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பின் சின்னமாகவும், இருக்கும் கிவ் நகரை பாதுகாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் ”என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | ஒரு நாளைக்கு 40 வீரர்களை சுட்டுத்தள்ளும் மென்பொறியாளர்
முன்னதாக விடியற்காலையில், கிவ் நகர் முழுவதும் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டன, ரஷ்யாவின் தாக்குதலால், 15-அடுக்கு அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு பெரிய அளவில் தீ மூண்டது. அதனை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர். இதில், குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டார். கட்டிடங்களில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் (Russia Ukraine War) ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நகரங்களை குறிவைத்து வருகிறது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR