உலகின் முதல் COVID-19 தடுப்பூசி: 40,000 பேர் மீது இறுதிக்கட்ட சோதனை செய்யும் ரஷ்யா
உலகின் முதல் COVID-19 தடுப்பூசி` பதிவு செய்த ரஷ்யா, மூன்றாம் கட்ட சோதனையில் சுமார் 40,000-க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறியுள்ளது.
World first COVID-19 vaccine: உலகின் முதல் COVID-19 தடுப்பூசி" பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்யா இறுதி சோதனையைத் தொடங்க உள்ளது. மூன்றாம் கட்ட சோதனையில் சுமார் 40,000-க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டாஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. இரண்டு மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷ்யா இந்த தடுப்பூசியை பதிவு செய்தது.
ALSO READ | COVID-19 Vaccine தயாரிப்பை தொடங்கியுள்ள ரஷ்யா.. சந்தேகத்தை கிளப்பும் விஞ்ஞானிகள்..!!!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது மகள்களில் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினார். "இது திறமையானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று எனக்குத் தெரியும், மேலும் இது தேவையான அனைத்து சோதனைகளையும் கடந்துவிட்டது என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன்" என்று புடின் தெரிவித்துள்ளார்.
ALSO READ | உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!
இருப்பினும், ரஷ்யா உருவாக்கிய தடுப்பூசியின் (COVID-19 vaccine) பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்பியது. COVID-19 தடுப்பூசி வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்று ரஷ்யா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.