கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கோவிட் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ள நிலையில், அந்த இலைக்கை எட்ட இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துகொண்டிருப்பதால் உலக மக்கள் லேசான நிம்மதி அடையத் துவங்கியுள்ள வேளையில், பல நாடுகளில் தொற்றின் அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், கோவேக்ஸின் (Coavaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது
ஸ்புட்னிக்-வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.
கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தொடர்பான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்தியாவின் SII நிறுவனம், ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கமலியா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியுடன் கூட்டு சேர்ந்து, அதன் ஹடப்சர் உற்பத்தி வளாகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி ( Sputnik V) தடுப்பூசிக்கு ஏப்ரல் மாதத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி-யின் முதல் தொகுப்பு (சுமார் 1.5 மில்லியன் டோஸ்) மே 1 அன்று இந்தியாவை அடைந்தது. கடந்த வாரம் தடுப்பூசி விலையை வெளியிட்ட டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், மே 13 அன்று கசவுலி மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனத்தால் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சற்றேஎ மந்தமாகியிருக்கிறது. ஆனால், தொற்றுநோயின் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து கணக்கெடுத்தால், உலகிலேயே அதிக பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 216 கோடி தடுப்பூசிகளில் நமக்கு 8 வகையான தடுப்பூசிகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த 8 வகை தடுப்பூசிகளும் இந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வந்து விடும் எனவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.