ஆர்மீனியாவில் ரஷ்ய ராணுவத்தின் (Russian Military) Mi -24 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜர்பைஜானின் எல்லைக்கு அருகே ஒரு மனித-போர்ட்டபிள் வான் பாதுகாப்பு அமைப்பு (man-portable air defence system) Mi-24 ஹெலிகாப்டர் மீது மோதியதாக ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.


அர்ஜெண்டினா-அர்மீனியா நாடுகளுக்கு இடையில் சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் சண்டை நடைபெற்று வருகிறது.  


உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ரஷ்ய ராணுவத் தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பாதுகாப்பாக ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.


ஆர்மீனியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவத் தளம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஹெலிகாப்டர் கீழே விழுந்ததற்கு யார் காரணம் விசாரணையில் தெரிய வரும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அண்மையில் அஜர்பைஜனின் இரண்டாவது பெரிய நகரான கஞ்ச் மீது ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. அர்மீனியாவுக்கும், அஜர்பைஜனுக்கும் இடையில் சண்டை நடைபெற்றுவரும் வேளையில், அர்மேனியாவே  இத்தாக்குதலை நடத்தியதாக அஜர்பைஜன் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.


ரஷ்யாவின் சமாதான முயற்சியின் பேரில் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில், சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR