அலெக்ஸி நவல்னி கொலை செய்யப்பட்டுள்ளார்... கடுமையாக சாடும் ஜோ பைடன்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய, தீவிர எதிர்ப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆன அலெக்ஸி நவல்னி, சிறையில் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய, தீவிர எதிர்ப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆன அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சிறையில் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞரான, அலெக்ஸி நவல்னி, மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர். அதிபர் புட்டினின் (Russian President Vladimir Putin), ஆட்சியையும் ஊழலையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த அவருக்கு இடையே பெரும் ஆதரவு இருந்தது. ரஷ்யாவின் கடுமையான சட்டங்களையும் மீறி, தைரியமாக செயல்பட்ட அலெக்ஸி நவல்னிக்கு, மில்லியன் கணக்கில் ஆதரவாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
அலெக்ஸி நவல்னிக்கு கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த உணவு
விமானம் பயணம் மேற்கொண்டு இருந்த அலெக்ஸி நவல்னிக்கு, நஞ்சு கலந்த உணவு சாப்பிட்டதன் காரணமாக, பெரும் உடல்நல பாதிப்பிற்கு உள்ளாகி, அதற்காக அவர் ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை மேற்கொண்ட பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பிய அலெக்ஸி நவல்னி மீது, புட்டின் அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, சிறையில் அடைத்தது. அவருக்கு 19 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி வடக்கு சைபீரியாவில் உள்ள, ஆர்டிக் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறையில் மரணம் அடைந்த அலெக்ஸி நவல்னி
சிறையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அலெக்ஸி நவல்னி, உடல்நிலை மோசமாகி சுயநினைவை இழந்தார். அதற்குப் பின் மருத்துவ ஊழியர்கள் வந்து சிகிச்சை அளித்த போதிலும், அவரை உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை
உலக அளவில் எழுப்பப்படும் பல கேள்விகள்
அலெக்ஸி நவல்னியின் மரணம் தொடர்பாக உலக தலைவர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புட்டின் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அராஜகத்தை எதிர்த்து தைரியமாக போராடிய, அலெக்ஸி நவல்னிக்கு புட்டின் தான் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாகவும் கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், அதிலிருந்து தப்பி வந்த அவரை சிறையில் அடைத்து தனிமையில் வைத்து வதைத்த போதிலும், வலுவான குரலாக நவல்னி இருந்தார் என்று, பைடன் கூறினார்.
ரஷ்யாவை நேசித்த அலெக்ஸி நவல்னி
அலெக்ஸி நவல்னிக்கு எதிராக கொலை முயற்சிகள் பல நடந்தது குறித்து கருத்து தெரிவித்த, ஜோ பைடன், விஷம் கொடுக்கப்பட்ட பின் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற அவர், அங்கேயே பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனால், தமக்கு ஆபத்து என்று தெரிந்த போதிலும், ரஷ்யாவை நேசித்த ஒரே காரணத்திற்காக அலெக்ஸி ரஷ்யா திரும்பினார் என்றும், அவரது மரணத்திற்கு போட்டியில் மட்டுமே காரணம் என்றும் பைடன் சாடினார்
ரஷ்யாவின் விசாரணை குழு மேற்கொண்டு வரும் விசாரணை
அலக்ஸி நவனி மரணம் குறித்த விசாரணைகள் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விசாரணை குழு கூறியுள்ளது. நவநியின் தாய்க்கு, அது மரணம் குறித்து செய்தி அனுப்பப்பட்டது எனக் கூறிய, நவநீதம் செய்தி தொடர்பாளர் கிரா, தனது ட்ரீட் செய்தியில், அலக்ஸி நவீன் படுகொலை செய்யப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார். மரணம் குறித்து முழு விசாரணை முடியும் முன் அலசி நவநீ யின் உடல் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட மாட்டாது என்று, ரைட் டு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்... நீடிக்கும் குழப்பம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ