மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை... சவூதி அரேபிய அரசு அறிவிப்பு
ரமலான் மாதம் (Holy month of Ramadan) முழுவதும், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் ரமலான் பண்டிகையை (Ramadan) முன்னிட்டு மசூதிகளில் இப்தார் விருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Saudi Arabia has Banned Iftar Meals within Mosques: இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் இஸ்லாமிய மதத்தின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். ரமலான் மாதம் (holy month of Ramadan) முழுவதும், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். சுய கட்டுப்பாடு, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற குணங்களை வலியுறுத்தும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில், ரமலான் 2024 மார்ச் 11ம் தேதி அன்று மெக்காவில் சந்திரனைக் கண்டதைத் தொடர்ந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத கால உண்ணாவிரத காலம் 2024 ஏப்ரல் 9ம் தேதி அன்று முடிவடையும். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் ரமலான் பண்டிகையை (Ramadan) முன்னிட்டு மசூதிகளில் இப்தார் விருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை
ரமலான் மாதத்தின் போது, இஸ்ளாமியர்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணா நோன்பு கடைபிடிக்கிறார்கள். பின்னர் ஒவ்வொரு மாலையும் இப்தார் என்று அழைக்கப்படும் விருந்து (Iftar meals) உணவுடன் விரதத்தை முடித்து கொள்கிறார்கள். அடிக்கடி குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சவூதி அரேபியாவில் (Saudi Arabia) ரமலான் மாதத்தில் மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் நோன்பை முடித்து கொள்ள, உணவு உட்கொண்ட பிறகு மசூதி வளாகத்திற்குள் உணவு அருந்துவதால், தூய்மையைப் பராமரிப்பது கடினமாகிறது என்பது குறித்து அந்நாடு கவலை தெரிவித்துள்ளது.
தற்காலிக அறைகள் அல்லது கூடாரங்களை ஏற்படுத்த தடை
பிப்ரவரி 20, 2024 அன்று இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "மசூதிகளின் தூய்மையைக் கருத்தில் கொண்டு இப்தார் விருந்துகளை மேற்கொள்ளக் கூடாது" என்று சவுதி அரேபிய அரசாங்கம் வலியுறுத்தியது. கூடுதலாக, மசூதிகளின் முற்றங்களில் ஒரு "பொருத்தமான இடத்தில்" இமாம்கள் மற்றும் முஸீன்கள் இப்தார் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இஃப்தார் விருந்திற்கான தற்காலிக அறைகள் அல்லது கூடாரங்களை ஏற்படுத்துவதை தடை செய்தது. "இஃப்தார் விருந்து அல்லது நோன்பை முடித்து கொள்ளுதல் இமாம் மற்றும் முஸீனின் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும். உணவை சாப்பிட்ட உடனேயே இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்குகள்... இந்த AI கருவி உங்களுக்கு உதவும்..!
இப்தார் விருந்துகளுக்கு நன்கொடைகள் கோருவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்
மசூதி அதிகாரிகள் இஃப்தார் நோன்புகளுகாக நிதி நன்கொடைகள் கோருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உது தொடர்பான உத்தரவில், "அரசின் பல்வேறு பகுதிகளில் உள்ள இமாம்கள் மற்றும் முஅஜின்கள் நோன்பை முடிக்க நடத்தப்படும் இப்தார் விருந்துகளுக்கு நிதி நன்கொடை வசூலிக்க வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.
புகைப்படம் சமூக ஊடக பதிவிற்கு தடை
மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் உட்பட எந்த ஊடக தளத்திலும் பிரார்த்தனைகளை ஒளிபரப்பவும் அனுமதி இல்லை.
மேலும் படிக்க | பசங்களுக்கு Maths வராதா... இந்த ஆப் மூலம் ஈஸியா தெரிஞ்சிக்கலாம் - இப்போவே பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ