சவுதி அரேபியா இளவரசர், ‘நியோம்’ (NEOM) என்ற பெயரில் நவீன நகரத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் சாலைகளையோ, கார்களையோ பார்க்க இயலாது. இது  கார்பன் வாயுக்கள் வெளியேற்றம் இல்லாத ஒரு பசுமை நகரத்தை உருவாக்கும் திட்டமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுதி அரேபியா (Saudi Arabia) செங்கடலை ஒட்டிய பாலைவனப் பகுதியில்,  ‘நியோம்’ (NEOM) என்ற பெயரில் நவீன நகரத்தை உருவாக்குகிறது. 5,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்  2017 ஆம் ஆண்டில் அறிவித்தார். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் பரப்பளவில் இந்த நகரம் அமைக்கப்ப்படும்.


புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக மையமாக நவீன நகரத்தை உருவாக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.  இது தொடர்பான சர்ச்சைகளும் தொடர்கிறது. இத்திட்டம் சாத்தியமில்லாத திட்டம் என்றும், இது தேவையான முதலீட்டை ஈர்க்க முடியாது எனவும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


இதுகுறித்து கருத்து தெரிவித்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், “மொத்தம் 170 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படும் இந்த நியோம்’ என்ற நவீன நகரம், 10 லட்சம் பேர் வசிக்கக் கூடியதாக இருக்கும். சாலைகள் மற்றும் கார்கள் இல்லாததால் கார்பன் வாயுக்கள் வெளியேற்றமும் இருக்காது. அதனால் இது இயற்கையுடன் இணைந்த சுற்று சூழலை பாதிக்காத நகரமாக இருக்கும்” என்றார்.


இதுதொடர்பாக நியோம் (NEOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நகரம் பசுமை பகுதிகள், பள்ளிகள், சுகாதார மையங்கள், அதிவேகப் போக்குவரத்து என அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். எவ்விதமான தேவைக்கும் ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இந்நகரில்  முக்கியப் பங்கு வகிக்கும். இங்கு தூய்மையான எரிசக்தி, சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை பெறலாம்” என்று கூறப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக எண்ணைய் வளம் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை பன்முக தன்மை கொண்டதாக ஆக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் வன்முறையை பரப்பக் கூடும்: FBI


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR