லண்டன்: இந்தியாவின் முண்ணனி வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (SBI), வரும் ஏப்ரல் மாதம் UK-வில் தங்களது வர்த்தகத்தினை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்படி வரும் ஏப்ரல் 1 முதல், இங்கிலாந்தில் SBI சேவைகள் State Bank of India UK Ltd, என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இங்கிலாந்தில் நிலவும் பரந்த வங்கி சேவை மேளான்மை நிறுவனங்களுடன் போட்டிப் போடவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து சில்லறை கிளைகளும் இணைத்து அதற்கு பதிலாக ஒரு புதிய UK-incorporated வங்கி சேவையின் கீழ் புது பெயர் மாற்றத்துடன் வெளிவரும் என தெரிகிறது.


இதுகுறித்து SBI-யின் பிராந்திய தலைவரான சஞ்சீவ் சதா தெரிவிக்கையில், "SBI வெளித்தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது, லண்டன் மற்றம் அதன் இணை சார்ந்த பகுதிகளில் உள்ள SBI வங்கிகளில் மட்டுமே இந்த பெயர் மாற்றம் நிகழும். மற்றப்படி டெபிட் கார்ட் சேவை, சலுகைகள் போன்ற விவகாரங்களில் எதும் மாற்றம் இருக்காது" என தெரிவித்துள்ளார்.