இஸ்லாமாபாத்: உள்நாட்டு மற்றும் வெளி பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமையன்று பிரதமர் இம்ரான் கான் தலைமையில் உயர்நிலை பாதுகாப்புக் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் (Parvez Khattak), கூட்டுப் படைத் தலைவர்கள் ஜெனரல் நதீம் ரஜா, ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பாஜ்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்டத் தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக பாகிஸ்தான் அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை விரும்புவதாக அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Read Also | 13 வயதில் 41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட பிரபலத்தின் Love Story


பாகிஸ்தான் பங்குச் சந்தை (Stock exchange) மீதான பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததற்காக சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு இந்த கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கராச்சி நகரில் இயங்கும் பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டடத்தில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்தாரிகள் அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.


கடற்படைத் தலைவர் அட்மிரல் ஜஃபர் மஹ்மூத் அப்பாஸி, விமானப்படைத் தலைவர் மார்ஷல் முஜாஹித் அன்வர், ஐ.எஸ்.ஐ இயக்குநர் ஃபைஸ் ஹாமீத் உட்பட பல முக்கிய அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.