விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?
Space Romance: நாசா கொண்டு வந்துள்ள ஒரு திட்டத்தின் மூலம், காதலர்கள் தற்போது விண்வெளியிலும் ரொமான்ஸ் வைத்துக்கொள்ளலாம். அந்த திட்டம் குறித்து இங்கே காணலாம்.
Space Romance: ஏழு கடல் கடந்து காதலனையோ காதலியையோ சந்திக்கும் காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பும் விண்வெளியில் சாத்தியமாகும் என சொன்னால் நம்ப முடிகிறதா. இது ஏதோ, ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் கதையல்ல, உண்மைதான். நீங்கள் விண்வெளியில் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
இதுவரை எந்த மனிதனும் விண்வெளியில் காதல் செய்யவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியப்படும். புதிய காதல் உலகத்திற்கான ஆயத்தங்களை நாசா நிறைவு செய்துள்ளது. நாசா இந்த திட்டத்திற்கு '68 மைல் ஹை கிளப்' என்று பெயரிட்டுள்ளது.
மேலும் படிக்க | என்ன ராசிப்பா இவரு... 2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் நபர்!
இந்த கிளப்பில் சேருவதன் மூலம், நீங்கள் உங்கள் துணையுடன் விண்வெளியில் காதல் செய்யலாம், உடலுறவை மேற்கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. நாசாவின் அனைத்து ஏற்பாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மக்கள் விண்வெளியில் காதல் செய்ய முன்பதிவு செய்ய முடியும். நாசா விண்வெளி வீரர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் விண்வெளி காதல் திட்டம் குறித்த முழுமையான தகவலை அளித்துள்ளார். இந்த ஆண்டு, வணிக விமானங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தவுடன், காதலிப்பவர்கள் விண்வெளி சுற்றுலாப் பயணிகளாக மாறி காதல் புதிய சாதனையைப் படைப்பார்கள் என்று அவர் கூறினார்.
விண்வெளியில் காதல் செய்வது அல்லது உடலுறவு கொள்வது சட்டவிரோதமானது அல்ல என்று அவர் கூறினார். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விண்வெளிப் பயணத்தின் செலவு குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு பயணிக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் கட்டணம் இருக்கும் என்று ஜோஸ் கூறினார். உங்களுக்கும் உங்கள் துணையின் விண்வெளிக் காதலுக்கும் ஆகும் செலவு ரூ.7 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | புதிய முதலீடு திட்டம்... காதலில் தோற்றால் கை நிறைய பணம் - இதோ முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ