உடலுறவின்போது ஆண்கள் இதையெல்லாம் கவனிப்பாங்க.. பெண்களே இத நோட் பண்ணுங்க!

உடல் உறவு என்பது அது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல உணர்வை அளிக்கிறது. குறிப்பாக, பெண் துணை, படுக்கையில் முதல் அடி எடுத்து வைக்கும்போது அதை ஆண்கள் விரும்புகிறார்கள். உடலுறவின் போது, ஆண்கள் தங்கள் பெண்ணைப் பற்றி பல விஷயங்களைக் கவனிக்கிறார்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2023, 08:54 PM IST
  • குறிப்பாக, இந்த 4 விஷயங்களை ஆண்கள் கவனிப்பார்கள்.
  • உடலுறவுக்கு பின்னர் அவர்கள் இதுகுறித்து சிந்திப்பார்கள்.
உடலுறவின்போது ஆண்கள் இதையெல்லாம் கவனிப்பாங்க.. பெண்களே இத நோட் பண்ணுங்க! title=

Relationship Tips: உடல் உறவு என்பது அது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல உணர்வை அளிக்கிறது. குறிப்பாக, பெண் துணை, படுக்கையில் முதல் அடி எடுத்து வைக்கும்போது அதை ஆண்கள் விரும்புகிறார்கள். உடலுறவின் போது, ஆண்கள் தங்கள் பெண்ணைப் பற்றி பல விஷயங்களைக் கவனிக்கிறார்கள். 

உடலுறவுக்குப் பிறகும் அவர்கள் அதுகுறித்து சிந்திக்கிறார்கள். உள்ளாடையாக இருந்தாலும் சரி, நகம் கடிப்பதாக இருந்தாலும் சரி, படுக்கையில் இருக்கும் பெண்களை ஆண்களை ஈர்க்கும் சின்ன சின்ன விஷயங்களாகதான் இருக்கும். 

ஆனால் இவை ஆண்களைப் பற்றி பெண்கள் நினைக்கும் சுகாதாரம் அல்லது உடல் சார்ந்தவை அல்ல! இது முற்றிலும் மாறுபட்ட விஷயம். உடலுறவின் போது, உடலுறவிற்கு பிறகும் பெண்களை குறித்து இந்த 4 விஷயங்களை ஆண்கள் கவனிக்கிறார்கள்.

மேலும் படிக்க | ஆபாச அசைன்மெண்ட்... பாலியல் கதை எழுத சொன்ன பள்ளி - அதுவும் ஃபேன்டஸி கதை!

பெண்ணின் உடல் அசைவுகள்

உடலுறவின் போது தங்கள் துணையின் உடல் எவ்வாறு நகர்கிறது என்பதை ஆண்கள் கவனிக்கிறார்கள். உடல் அசைவுகள் கடினமானதா அல்லது நெகிழ்வானதா என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள். உடலுறவின் போது ஆண்கள் தங்கள் துணையின் உடலுடன் முடிந்தவரை நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள். பாலியல் செயல்முறை தங்களுக்கு மிகவும் கடினமானதாகவும், சங்கடமானதாகவும் உணரும்போது பெண்கள் அதை வெறுக்கிறார்கள், ஏனென்றால் அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு இனிமையானது அல்ல என்பதை ஆண்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்துகொள்வார்கள்.

கண்கள் 

உடலுறவின்போது, ஆண்கள் தங்கள் துணையின் கண்களைப் பார்க்க விரும்புகிறார்கள். உடலுறவின் போது எல்லாவிதமான எண்ணங்களும் அவர்களின் மனதில் ஓடுகின்றன. அவள் என் உடலை விரும்புகிறாளா அல்லது அவள் என்னைச் சோதிக்கிறாளா?. ஆண்கள் தங்கள் கண்களைப் பார்த்து பெண்களின் உடல் மொழியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள், இதனால் தங்கள் துணையின் உணர்ச்சிகளுடன் கண் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள்.

துணையின் குரல்

ஆண்கள் உண்மையில் கவனிக்கும் மற்றொரு விஷயம் இது. தங்கள் பெண்ணின் குரல் வழக்கத்தை விட ஆழமாக இருந்தால், அவள் மிகவும் உற்சாகமாக இருப்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். துணைக்கு மூச்சுத் திணறல் இருந்தால், அவள் சோர்வாக இருக்கலாம் என்று அர்த்தம். ஆனால் குரல் ஆழமானதாக இருந்தால், அவள் அதிக உற்சாகத்துடன் தொடர்கிறாள் என்பதை உணர்வார்கள். இதன் பொருள் அடுத்த பாலியல் செயல்முறை மிகவும் நன்றாக இருக்கும்.

உள்ளாடை

உடலுறவின் போது தங்கள் பெண் எந்த வகையான உள்ளாடைகளை அணிகிறார் என்பதை ஆண்கள் கவனிக்கிறார்கள். அவர்கள் பழைய உள்ளாடையை அணிந்திருந்தால், அந்த பெண் உண்மையில் முயற்சி செய்யவில்லை என்பதையும் குறிக்கிறது. எல்லா ஆண்களும் இதைப் பற்றி புகார் செய்வதில்லை, ஆனால் படுக்கையில் அவர்களை ஈர்க்க தங்கள் இணை, பாலினத்தைத் தூண்டும் உள்ளாடைகளை அணிந்தால் அவர்கள் நிச்சயமாக அதை விரும்புகிறார்கள். 

இதில், கவனம் செலுத்துவது மூலம்  பெண், தான் விரும்பும் ஆண் காதல்வாழ்வில் இருந்து பிரிவதை தடுக்க முடியும். இது இருவழிப்பாதை என்பதால், இருவருக்கும் தங்கள் இணை சார்ந்த யோசனைகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா? ஆரோக்கிய நன்மைகள் இருக்கு
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News