லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த ஆண்டு இசை உலகில் வெளியான சிறப்பான இசைகளை அங்கீகரிக்க நடைபெறும் கிராமி விருதுகளை தி ரெக்கார்டிங் அகாடமி அறிவித்துவருகிறது. இசை பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், இசை விருந்தும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சலில் நடந்து வரும் கிராமி விருது விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  இசை, ராக், பாப் நடனம், என பல பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுகள் உலக அளவில் புகழ் பெற்றவை. இந்த ஆண்டிற்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.



தமிழ் பாடகர் சங்கர்மகாதேவன், விநாயக்ராம் செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் இந்த ஆண்டு கிராமி விருதை வென்றுள்ளனர்.



இவர்களின் இசைக்குழுவிற்கு THIS MOMENT என்ற இசை ஆல்பத்திற்ககாக கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீகாக் தியேட்டரில் நடைபெற்று வரும் கிராமி பிரீமியர் விழாவில், கிளாசிக்கல் மியூசிக்கிற்கான 2023ம் ஆண்டிற்கான சிறந்த தயாரிப்பாளருக்கான விருது எலைன் மார்டோனுக்குக் கிடைத்தது.


மிச்செல் ஒபாமா சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு ஆகியவற்றை தி லைட் வி கேரி: ஓவர்கம்மிங் இன் அன்சர்டைன் டைம்ஸ் வென்றார்.


ஒரே இரவில் 3 கிராமி விருதுகள்


லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 66 வது கிராமி விருதுகளில் இந்தியா, அனைவரது கவனத்தையும் பெற்றது. ஜாகிர் ஹுசைன் பேலா ஃப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சௌராசியாவுடன் இணைந்து "பாஷ்டோ" இல் பணியாற்றியதற்காக உலகளாவிய சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதை வென்றார். 


மேலும் படிக்க | பாரத ரத்னா விருது பெறப்போகும் பாஜக லால் கிருஷ்ண அத்வானியின் ‘யாத்திரைகள்’


இது வரை 3 கிராமி விருதுகளை வென்று சரித்திரம் படைத்தார் உஸ்தாத் ஜாகிர் உசேன் என்றால், ராகேஷ் சௌராசியா 2 விருதுகளை பெற்றிருக்கிரார். சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன். புல்லாங்குழல் கலைஞர் ராகேஷ் சௌராசியாவுடன் இணைந்து இரண்டாவது கிராமி விருதை வென்றார் ஜாகிர் ஹூசைன்.



இந்த விருதுகளுக்கு, ஒன்பது பிரிவுகளில் SZA பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெய்லர் ஸ்விஃப்ட், ஒலிவியா ரோட்ரிகோ, பாய்ஜெனியஸ், மைலி சைரஸ், ஜான் பாடிஸ்ட், விக்டோரியா மோனெட் மற்றும் பில்லி எலிஷ் போன்றவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறது SZA.  


மேலும் படிக்க | Marriage Scam: மணப்பெண்களே மணமகன்களாகவும் மாறினால்? அதிர வைக்கும் வெகுஜன திருமண வீடியோ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ