World Bizarre News: ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், அனைவரும் இந்த ஆண்டில் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என சபதம் எடுத்துக்கொள்வது வழக்கம். புத்தாண்டுக்கோ அல்லது அவர்களின் பிறந்தநாளுக்கோ சபதம் எடுப்பார்கள், அதாவது உடல் எடையை குறைப்பது, உடல் எடையை அதிகரிப்பது, இந்தந்த இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் அல்லது தினந்தோறும் அதிகாலையில் எழுந்திருப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் சபதம் எடுப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி, அந்த சபதமும் கொள்கையும் எத்தனை நாளுக்கு நீடிக்கிறது என்பதுதான் ஒவ்வொரு தனி மனிதரையும் பொறுத்தது எனலாம். வைராக்கியமும், அதிக கவனம் உள்ளவர்களும் ஏற்றுக்கொண்ட சிலரே சபத்தை முடிந்தவரையில் கொண்டுசெல்வார்கள், பலரோ அசட்டையாக அவற்றை கொஞ்ச நாள்களிலேயே காற்றில் பறக்கவிற்றுவிடுவார்கள். 


300 ஆண்களுடன் உடலுறவு


அந்த வகையில், ஆஸ்திரேலியாவை ஒரு பெண்மணி வித்தியாசமான குறிக்கோளை இந்த ஆண்டில் எட்டிவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரபலமான அந்த பெண்மணி சமூக வலைதளங்களில் தனது ஃபாலோவர்ஸ்களுக்கு அந்த திட்டம் குறித்த அறிவித்த நிலையில் அது பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது. 


மேலும் படிக்க | நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!


அன்னி நைட் என்ற அந்த பெண்மணி, அவரது பாலியல் சார்ந்த விஷயங்களுக்காக ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதள பயனர்களிடமும் பிரபலமானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், அன்னி நைட், தனது உடலுறவு குறித்த திட்டத்தை சமூக வலைதளத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, கடந்தாண்டு 300 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இந்த சாதனையை இந்தாண்டில் முறியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். 


365 ஆண்கள் இலக்கு 


நடப்பு 2024ஆம் ஆண்டில் 365 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அன்னி தெரிவித்திருக்கிறார். அதாவது, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள உள்ளதாக சபதம் ஏற்றுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஏற்றுக்கொண்ட குறிக்கோளை நோக்கி இப்போதே அந்த பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டதாகவும், தற்போது வரை 70 வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டிருப்பதாகவும் அன்னி தெரிவித்தார். மேலும், கடந்த பிப். 14ஆம் தேதி காதலர் தினத்தில் தனக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் இதுசார்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.


அன்னி நைட் இன்ஸ்டாகிராம்:



இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றில் கூறுகையில்,"365 நாள்களில் 365 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்வதை இலக்காக வைத்திருக்கிறேன். தற்போது அதில் முன்னணியில் உள்ளேன் எனலாம். தற்போதைய வேகத்தில் நான் சென்றால் 365 என்ற எண்ணிக்கையை இந்தாண்டின் பாதியிலேயே எட்டிவிடுவேன் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார். 


மேலும், தனது எதிர்காலம் குறித்தும் அன்னி பகிர்ந்துகொண்டார். அதில் தனக்கு ஏற்ற சரியான நபரை (Mr Right) அன்னி தேடிவருவதாக குறிப்பிட்டார். மேலும், இன்னும் 5 வருடங்களில் தான் தாய் ஆக வேண்டும் என விரும்புவதாகவும், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அன்னி தெரிவித்தார். மேலும், சுயமாக தொழில் தொடங்கி, எந்த பிரச்னையையும் இல்லாமல் தனக்கான வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்பது அன்னியின் நீண்டகால குறிக்கோள் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 


மேலும் படிக்க | போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ