தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணிற்கு ஏற்படும் அந்த தாய்மை உணர்வு என்பது மகத்துவம் வாய்ந்தது.  பிரசவ காலத்தில், படும் தாங்க முடியாத வேதனை அனைத்தையும், அந்த பிஞ்சு முகத்தை கண்டதும் மறைந்து விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் ஒரு அதிசய நிகழ்வாக பிரிட்டனில் ஒரு பெண் பிரசவ வேதனை ஏதும் இன்றி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம், அந்த பெண்,  குழந்தையை வெறும் 27 வினாடிகளில் பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். 29 வயதான சோஃபி பக், பிரசவ வேதனையை அனுபவிக்காத உலகின் மகிழ்ச்சியான பெண்களில் ஒருவர்.


சோஃபி பக், 38 வார கர்ப்பமாக இருந்தார். திடீரென்று நள்ளிரவில், வயிற்றி சிறிது சங்கடம் ஏற்படுதைப் போல் உணர்ந்ததால் கழிப்பறைக்கு சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் கழிப்பறையில், குழந்தை வெளியே வந்திருப்பதை பார்த்ததும் கூச்சலிட்டு தன் கணவரை அழைத்தார். அவரது கணவர் கிரிஸ், கழிப்பறையில் பேசினில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தார். கழிப்பறையிலேயே அவர் அறியாமலேயே சோஃபிக்கு அங்கே பிரசமாகிவிட்டது.  சோபிக்கு வெறும் 27 வினாடிகளில் பிரசவமாகி குழந்தை வெளியே வந்து விட்டது.


ALSO READ | Bizarre 'Out of nowhere': கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

குளியலறையில் செல்வதற்கு முன்பு தனது நண்பருடன் தனது நண்பருடன் தொலைபேசியில் சோஃபி பேசிய போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால், தான் கழிப்ப்றை சென்று விட்டு வந்து சிறிது நேரம் கழித்து பேசுவதாக கூறினார்.


இந்த சம்பவத்தால் சோபியின் கணவர் கிறிஸும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். உடனேயே, கிறிஸ் குழந்தையையும் தாயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர் சோபியையும் அவரது குழந்தையையும்  ஆரோக்கியமாக உள்ளதாக கூறியதை அடுத்து நிம்மதி அடைந்தார்


சோஃபி க்கு இந்து இரண்டாவது பிரசவம் ஆகும். அவருக்கு முதல் பிரசவத்தில்,  குழந்தை 12 நிமிடங்களில்  பிறந்ததாக சோஃபி தெரிவித்தார்.


ALSO READ | செவ்வாய் கிரகத்தில் ஒலிக்கும் சப்தத்தை கேளுங்கள்; NASA வெளியிட்டுள்ளது புதிய வீடியோ


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR