லண்டன்: நீங்கள் தனியாக ஒரு காட்டில், கரடுமுரடான பாதையில் நடந்து செல்வதே ஒரு திகிலான அனுபவம் தான். அதுவும்,   அந்த கரடு முரடான பாதையில், ஒரு கல்லறையில், பயங்கரமான அனுபவம் ஏற்பட்டால், ஒரு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுவது இயற்கை தானே.  இங்கிலாந்தில் ஒருவருக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லறைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த விரல்கள்  


ஒரு நபர் காட்டு பகுதி வழியாகச் சென்றபோது, ​​கல்லறையின் மேல் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை ஒருவர்  கண்டாதாகவும்,  பயத்தில் அலறியதாகவும், டெய்லி ஸ்டார் நாளிதழில்  செய்தி வெளியாகியுள்ளது.  பயத்தில் உறைந்து போன அந்த நபரால், தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லை. ஆனால்  சுதாரித்து கொண்டு என்ன நடக்கிறது என கவனமாகப் பார்த்த பிறகு, அந்த நபருக்கு காரணம் தெரிந்தது.


உண்மையில், இறந்த மனிதனின் விரல்கள் என்று அவர்  நினைத்தது  தவறு. கல்லறையிலிருந்து வெளியே வந்தது இறந்தவரின் விரல்கள் அல்ல, ஆனால் இறந்த மனிதனின் விரல்கள் போல் தோன்றும் பவள செடி. அவை இறந்த மனிதனின் விரல்கள் என்று தெரிகிறது.


ALSO READ | Viral Video: விபரீதத்தில் முடிந்த குலை நடுங்க செய்யும் பைக் சாகசம்!


இறந்த மனிதனின் விரல்கள் போல் பார்ப்பதற்கு இருந்ததாலும், தனியான அந்த காட்டில் அவர் பயந்து விட்டார். பவளச்செடி  வளர்ந்த பிறகு, அதன் கிளைகள் தரையில் இருந்து கிழித்து வெளியே வரும் போது  மனித உடலின் விரல்கள் போல் பார்ப்பதற்கு இருக்கும். இந்த காரணத்திற்காக, இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் (Dead Man's Fingers) என்று அழைக்கப்படுகிறது.


ஹாலோவீன் வார இறுதியில், பலரை பயமுறுத்த Dead Man's Fingers பவளத்தையும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலோவீன் (Halloween) தினம்  அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பயமுறுத்தும் வகையில் தோற்றமளிக்கும் வகையில் அலங்காரம் செய்து கொள்கின்றனர்.


ALSO READ | Viral Photo: பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR