Viral Video: விபரீதத்தில் முடிந்த குலை நடுங்க செய்யும் பைக் சாகசம்!

பிரபலமாக வேண்டும் என்ற பேராசையில், ஆபத்தான ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கும் போது, ​​கடுமையான விபத்துக்களில் சிக்கி, தங்கள் உயிரையும் கூட சிலர் இழந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2021, 01:23 PM IST
Viral Video: விபரீதத்தில் முடிந்த குலை நடுங்க செய்யும் பைக் சாகசம்!  title=

சாகசங்களை செய்து  சமூக ஊடக தளங்கள் மூலம் புகழ் பெற வேண்டும், பிரபலமாக வேண்டும் என்ற பேராசையில், ஆபத்தான ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கும் போது, ​​கடுமையான விபத்துக்களில் சிக்கி, தங்கள் உயிரையும் கூட சிலர் இழந்துள்ளனர். அந்த வகையில், மிக ஆபத்தாக ஒருவர் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் காரில் பயணித்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். முழுமையாக பைக்கர் உடையில் காணப்படும் ஒரு நபர் தனது ஹெல்மெட்டில் GoPro கேமராவுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை வீடியோ காட்டுகிறது. இருவழிச் சாலையாக இருந்தபோதும், ​​இருபுறமும் டிவைடர் இல்லை. பைக்கரின் ஸ்டண்ட் காரணமாக, டேங்கரில் மோதும் வேகத்தையும். அது தூர சென்ற விழுவதையும் பார்த்தால் பலர் காயமடைந்திருக்க கூடும் என்பதோடும், ஓட்டிய பைக்கரும் உயிருடம் இருந்திருப்பாரா என்பதும் மிகவும் சந்தேகமே.

ALSO READ | Viral Photo: பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா..!!

பைக்கர் செய்த மோட்டார் சைக்கிள் சாகசத்தில், பைக் அதன் பின் டயரில் ஓடுகிறது. அதன், முன் டயரை முழுவதுமாக தூக்கி, மைக்க்கில் சாகசம் செய்யும் காட்சி பார்ப்பவரை குலை நடுங்க செய்கிறது. பின்னர் அந்த நபர் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னா; வந்து கொண்டிருந்த டேங்கரின் டயரில் மோதிய சிதறுவதை வீடியோவில் காணலாம்.

வீடியோவை கீழே காணலாம்: 

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பாதுகாப்பாக இருங்கள், இது போன்ற ஜீரோயிஸம் மிக மிக ஆபத்தனாது” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

ALSO READ:Viral Video நீரில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: இது காதலா? கிரோதமா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News