பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் 'நிர்வாணப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்' என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் சக்திவாய்ந்த அமைப்புகளை விமர்சித்து வரும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் Saifullah Jan பிரபலமானவர். நன்கு அறியப்பட்ட பாகிஸ்தான் பத்திரிகையாளர் சைபுல்லா ஜான், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர்களின் கைகளில் தான் எதிர்கொண்ட சித்திரவதை மற்றும் அவமானம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.


வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் இதுபற்றி பேசினார் சைபுல்லா ஜான். அவர், சர்சாதா பிரஸ் கிளப்பின் ஆளும் குழுவின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்துல்லா, அவரது சகோதரர் பாஹிம், ஜகாத் கமிட்டி தலைவர் இப்திகார் மற்றும் சில ஆயுததாரிகள் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக குற்றம் சாட்டினார். தான் சர்சதா பஜாரில் உள்ள பி.டி.ஐ. அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிர்வாணப்படுத்தபட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தார் என தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.


Alsio Read | குரங்குகள் பற்றாக்குறையால் மருத்துவ ஆராய்ச்சிகள் முடங்கும் நிலை! 


தன்னை நிர்வாணப்படுத்திய பிறகு, கட்சியின்  தலைவர்கள், அதை வீடியோ பதிவும் செய்துள்ளதாக சைபுல்லா ஜான் தெரிவித்தார். பொது அழுத்தத்திற்குப் பிறகுதான் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் எழுத்தாளர் சைபுல்லா ஜான் கூறினார்.


இது குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு சர்தாரி காவல் நிலைய காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது ஷோயிப் உத்தரவிட்ட போதிலும், காவல்துறையினர் "தாமதப்படுத்தும் தந்திரங்களை பயன்படுத்தினர், மேலும் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை எஃப்.ஐ.ஆரில் (FIR) சேர்க்கவில்லை" என்றும் பத்திரிகையாளர் குற்றம் சாட்டினார்.


சித்திரவதை காரணமாக அவரது கால் எலும்பு முறிந்திருப்பதாகவும், சிறு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் எழுதியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


தான் கொடுத்த புகாரின் பேரில், பி.டி.ஐ.யின் ஐந்து தலைவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இப்திகரின் பெயரை போலீசார் நீக்கிவிட்டதாக சைபுல்லா கூறினார்.


பெஷாவர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பதால், றும் உள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது என்றும் தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.


Also Read | Teddy trailer: ஆர்யா நடிக்கும் ‘டெடி' திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீசானது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR