Afghanistan: ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து  கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தாலிபான் அறிவித்து விட்டது. மேலும், தாலிபான்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர். அதோடு,  பெண்கள் கை விரல்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். உத்தரவை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சில இளைஞர்கள் கூட ஜீன்ஸ் அணிந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று ஆப்கனை (Afghanistan) விட்டு அமெரிக்க ராணுவம் கிளம்பும் நிலையில்,  பல அமெரிக்கர்கள் இன்னும் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்படுவது, அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  தாலிபான்களை எதிர்த்து போர் புரிந்து வந்த அமெரிக்கா, இப்போது, முறையான திட்டமிடல் இல்லாமல் அமெரிக்கா தனது மக்களையே முழுக்க மீட் முடியாமல் உள்ளது என அமெரிக்காவில் பெரிய அளவில் அதிருப்தி எழும்புகின்றன‌.


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!


இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி (Shahid Afridi), திங்களன்று (ஆகஸ்ட் 30) ​​ஊடகங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள், நேர்மறையான எண்ணத்துடன் அகைப்பற்றியதாகவும், பெண்கள் பணி செய்ய அவர்கள் அனுமதித்துள்ளதாகவும்  கூறியுள்ளார். 


தலிபான் (Taliban) பெண்கள் வேலை செய்ய அனுமதித்துள்ளதோடு, கிரிக்கெட் விளையாட்டையும், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரையும் நடத்த தாலிபான் ஆதரவாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டியுள்ளார்.


அவரது அதிர்ச்சி தரும் வீடியோவை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்து கொண்டு அடுத்த தாலிபான் தலைவராக வர வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்: 



ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR