Viral Video: இந்தோனேஷியாவில் திறந்தவெளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் ஒரு வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் வீடியோவும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, துரதிருஷ்டவசமாக உயிரிழந்த அந்த வீரருக்கு மக்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைதானத்தின் நடுவே அவர் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு மின்னல் அவரை தாக்கியதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை நோக்கி ஓடியது வீடியோவில் தெரிகிறது. மின்னல் தாக்கிய பிறகும் அவர் மூச்சுவிட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இருப்பினும், மருத்துவமனையில் மேற்கொண்டு பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதியானது.  


X தளத்தில் வீடியோ வைரல்


இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ X தளம் மூலம வைரலானது. @KobbeMainoo என்ற X தள பயனர் அந்த வீடியோவை பதிவிட்டு,"இந்தோனேஷியாவில் ஒரு கால்பந்து போட்டியின்போது ஒருவரை மின்னல் தாக்கியது" என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ நேற்று (பிப். 12) பதிவிடப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | அதிசயம்..! 1 லட்சம் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் மொராக்கோவில் கண்டுபிடிப்பு


இந்த சம்பவம் இந்தோனேஷியாவின் தெற்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள பாண்டுங் நகரில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் நடந்துள்ளது. அந்த மைதானத்தில் எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் என இரு அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியின் போது இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த வீரர் 35 வயதான செப்டியன் ரஹர்ஜா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  


நேரில் பார்த்தவர் கூறியது...


கடந்த பிப்.10ஆம் தேதி அன்று (கடந்த சனிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது. கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்துள்ளது. மழை பெய்த சற்று நேரத்திலேயே அந்த வீரர் மீது மின்னல் தாக்கியது. அவரை சக வீரர்கள் உடனடியாக அருகில் இருந்த சரினிங்சி மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். 


இருப்பினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் உறுதிப்படுத்தி உள்ளனர்.  மேலும், இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்த தகவல்களின்படி, உயிரிழந்தவரின் ஜெர்ஸியில் தீக்காயங்களான தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற மின்னல் அடிக்கும் நேரங்களில் மிகவும் திறந்தவெளி மைதானங்களில் நிற்பதை தவிர்க்கவும் என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | ஒரு தாயின் கவனச்சிதறல்?... ஒரு மாத பெண் குழந்தை பலி - அதிர்ச்சி சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ