34 Year Old Woman Become Grandmother: இப்போதெல்லாம் 30 வயதை தொட்டுவிட்டாலே பூமர் என சொல்லிவிடுகிறார்கள். அதாவது, பழங்காலத்து ஆட்கள் என நம் ஊர்ப்புறங்களில் சொல்வதை போன்று இந்த பூமர் என்ற சொல்லாடல் கையாளப்படுகிறது. 90s கிட்ஸ், 2K கிட்ஸ் என்ற சொல்லாடல்களும் சமூக வலைதளங்களில் நிங்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள். அதாவது, ஒருவரின் வயதையும், அவர் சார்ந்த தலைமுறையையும் குறிப்பிட்டு அவரை மதிப்பிடுவதே இந்த சொல்லாடல்களின் நோக்கம். ஆனால், பலரும் இவை வயது சார்ந்தது இல்லை, மனநிலை சார்ந்தது என்றே கூறி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், தற்போது 34 வயதான ஒரு சமூக வலைதள பிரபலம் பாட்டியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், 34 வயதான அந்த பெண்ணிற்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார், அந்த மகனுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அந்த பெண் தற்போது பாட்டியாகியிருக்கிறார். அதாவது இங்கு சொல்வது போல் 90s கிட் ஒருவர் பாட்டியாகிவிட்டார் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம். 


சமூக வலைதள பிரபலம்


சிங்கப்பூரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம்தான் ஷிர்லி லிங். 34 வயதான ஷிர்லி லிங் இன்ஸ்டாகிராமிலும், யூ-ட்யூபிலும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடுபவர். ஷிர்லி லிங் சிக்கன் சார்ந்த உணவகத்தை நடத்தி வருகிறார். யூ-ட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உணவுகள் குறித்த வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் Ah Girls Go Army என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இதன் பிறகு அவர் இன்னும் பிரபலமானார்.



மேலும் படிக்க | உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?


அந்த வகையில் அவருடைய சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பாட்டியாகியிருப்பதாகவும், தனது 17 வயதான மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கும் இதே வயதில்தான் குழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது 8 முதல் 17 வயது வரை மொத்தம் 4 குழந்தைகள் ஷிர்லி லிங்கிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. 


தாய் அட்வைஸ்


அந்த வீடியோவில் இளம் தாயாக இருந்துகொண்டு தனது மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை அளித்து அவருக்கு ஆதராவாக பேசியிருந்தார். இதுகுறித்து அந்த வீடியோவில்,"34 வயதில் நான் பாட்டி ஆகிவிட்டேன். இதனை எப்படி பார்க்கிறீர்கள், இதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இதில் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது" என்றார். மேலும் பெற்றோராக இருக்கும் சவால்கள் குறித்தும் அவர் பேசினார். அதில் தனது மகன் தன்னிடம் இந்த விஷயம் குறித்து பேசியபோது அவனை திட்டுவதற்கு பதில் ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருப்பதே நல்லதாகும். தனது சொந்த அனுபவத்தின் மூலம் இளம் பெற்றோராக இருப்பதால் அவர் சந்தித்த பிரச்னைகளை விளக்கினார். 



அதாவது, குழந்தை வளர்ப்பு குறித்து ஷிர்லி லிங் மற்றொரு வீடியோவில் பேசியதாவது,"ஏற்கனவே நடந்துவிட்ட விஷயங்கள் எதையும் நம்மால் மாற்ற முடியாது, அது நம் கையில் இல்லை. குழந்தைகளை திட்டுவதற்குப் பதிலாக, நான் அவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க விரும்புகிறேன். நல்ல குழந்தைகளையோ அல்லது சேட்டை செய்யும் குழந்தைகளையோ நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், நம் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க நாம் வழிகாட்ட முடியும்" என்றார். 


மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்... மூக்கில் விரல் வைக்கும் உலக நாடுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ