Australia: கடலில் மேகம் இறங்குமா? இறங்கும், ஆனால் அதில் பாம்பும் இருக்கும்!
ஆஸ்திரேலியாவின் நுரை நிறைந்த கடற்கரைகளில் இப்போது பாம்புகள் பதுங்கியிருக்கின்றன... எப்படீ என்று அதிர்ச்சியாக இருக்கிறதா?
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் நுரை நிறைந்த கடற்கரைகளில் இப்போது பாம்புகள் பதுங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான மற்றும் வினோதமான இடம்.
ஆஸ்திரேலிய (Australia) கண்டம் பல்வேறு உயிரினங்கள் மற்றும் பயமுறுத்தும் பூச்சிகள் வாழும் இடம். அவற்றில் பெரும்பாலானவை கங்காருஸைப் போல சாந்த குணம் கொண்டவை அல்ல. மாபெரும் சிலந்திகள் மற்றும் அச்சுறுத்தும் பூச்சிகளின் ஆஸ்திரேலிய ஜந்துக்களின் படங்கள் சமூக ஊடகங்களில் (Social media) நிறைந்திருக்கின்றன.
இப்போது சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா செல்லும்போது மற்றொரு விச்யயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் கடற்கரைகளில் (beach), கடல் பாம்புகள் (sea-snakes) பதுங்கியுள்ளன.
அது மட்டுமல்ல, விஷயங்களை மோசமாக்கும் பல்வேறு தகவல்கள் அச்சத்தை அதிகரிப்பதாக இருக்கின்றன. ஆஸ்திரேலிய கடற்கரைகளும், கடலும், புயல்களால் உருவாகியுள்ள அடர்த்தியான நுரையில் (foam) மூடப்பட்டுள்ளன. நீரின் மேற்பரப்பை மூடியிருக்கும் இந்த நுரை உருவாவதற்கான காரணம் என்ன? பல்வேறு விதமான கடல்பாசிகள் (algae), உப்புக்கள், மாசுபடுத்திகள் (pollutants) மற்றும் கொழுப்புகளும் கலக்கும் போது அவை நுரையாக உருவெடுக்கின்றன. வானிலுள்ள மேகம் போல, கடலில் நுரை மேகங்களைப் போல் காணப்படுகின்றன.
Also Read | இது கோழியா இல்லை டைனோசரா? இல்லை மயிலா?
இந்த நுரைகள் இருப்பதால் தண்ணீருக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியாமல் செய்துவிடுகிறது. கடல் நீரில் விளையாடும்போதோ, கடற்கரையில் நடந்து செல்லும்போதோ உங்கள் கால்களின் அருகில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியாது.
உண்மையில் நீங்கள் நடந்துக் கொண்டிருக்கும்போது பாம்பு வந்தால் எப்படி இருக்கும். கீழே உள்ள ட்வீட்டில் வீடியோவைப் பாருங்கள். கடல் நுரையில் ஒரு நாய் (dog) காணமல் போனது.. அதற்கு என்ன ஆயிற்று? பாருங்கள்...
இது போன்ற சூழ்நிலையில், இந்த கடற்கரைகளில் இருந்து விலகியிருக்குமாறும், நீச்சலடிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உண்மையில் நிலைமை எப்படி இருக்கிறது? நாங்கள் சொல்லவில்லை, இந்த ட்வீட்டர் (tweet) செய்தியை பார்த்து நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்....
உண்மையில் இயற்கையின் அதிசயங்கள் என்றுமே அற்புதமானவை. அவை மனதை மயக்குவது மட்டுமல்ல, அச்சத்தையும் கொடுப்பது என்பதற்கு ஆஸ்திரேலியாவின் இந்த கடற்கரை ஒரு உதாரணம் தான்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR