சோமாலியா மிகவும் ஏழ்மையான நாடு. அங்கு பசி, பட்டினி என்பது எப்போதும் இருக்கும் பிரச்சனை. அண்மையில் ஐ.நா சபை வெளியிட்ட அறிவிப்பில், அந்நாட்டில் சுமார் 20 லட்சம் பேர் பசி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கும் பஞ்மிருக்காது. கடற்கொள்ளைக்கு மட்டுமில்லாது, ஊழலுக்கும் அந்நாடு பெயர் பெற்றது. இப்போது, அப்படியான ஊழல் புகார் ஒன்றில், அதிபரே பிரதமரை பணியிடை நீக்கம் செய்துள்ளதுஉலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!


பிரதமராக முகமது ஹூசைன் ரோபிள் பதவி வகித்து வருகிறார். இவர் கடற்படைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதுடன், பல்வேறு ஊழல்களிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதிபராக இருக்கும் ஃபர்மோஜா, பிரதமர் முகமது ஹூசைன் ரோபிளை திடீரென பணியிடை நீக்கம் செய்துள்ளார். அவருடன் சோமாலிய கடற்படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் கப்டிக்ஸாமிட் மக்ஸாமட்டையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.


ஆனால், இதன் பின்னணியில் வேறு காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமருக்கும், அதிபருக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அதிகாரச் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமரை கலந்தாலோசிக்காமல் அதிபர் முடிவெடுத்து வந்ததால், பிரதமர் ஹூசைன் அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சண்டை முற்றிய நிலையில், தற்போது பிரதமர் ஹூசைன் மீது இத்தகைய நடவடிக்கையை அதிபர் எடுத்துள்ளார்.


 ALSO READ | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR