பெய்ஜிங்: தென்கிழக்கு சீனாவில், ஒரு நபர் வெறும் 15 வினாடிகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இந்த நபர் ஒரு சந்தையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகே 15 விநாடிகள் நின்றதால் இந்த கொடிய நோய்க்கு ஆளானார். பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் "நோயாளி எண் ஐந்து" என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஷுவாங்டாங் சந்தையில் நோயாளி எண் 2 க்கு அருகில் நோயாளி எண் 5 நின்றுள்ளதால் அவரும் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று ஜியாங்பேயின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"நோயாளி எண் 5" தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முகமூடியை அணியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட "நோயாளி எண் 5" கடந்த இரண்டு வாரங்களாக அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த நபர் கடலோர நகரமான நிங்போவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளி இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


கரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் தோன்றியது என்பதை உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கிடையில், இந்த நோய் காரணமாக இதுவரை மொத்தம் 564 பேர் இறந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மற்றொரு மருத்துவமனையின் பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 564 பேர் இறந்துள்ளதாகவும், 31 மாகாணத்தில் 28,018 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


சீனாவில் நோயாளிகளின் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது என்பது உண்மை. வுஹானில், வுஹானில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் உட்பட 28 மருத்துவமனைகளில் 8182 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 8254 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இது தவிர, மருத்துவ உபகரணங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. வைரஸ் பரவுவதைத் தடுக்க, ஹூபே மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் பயணம் செய்ய அரசாங்கம் கடுமையான தடை விதித்துள்ளது. வைரஸ் பரவுவதை குறைக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். எனவே மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வது தடுக்கப்பட்டு உள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.