கபாலி படத்தினை ப்ரமோட் செய்வதற்காக, தயாரிப்பு நிறுவனம் கபாலி திரைப்பட புகைப்படத்தினை விமானத்தில் ஒட்டி விளம்பரம் செய்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேப்போல் தனி மனிதரின் உருவத்தினை விளம்பரப்படுத்த, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் குலாலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ப்ரத்தியேக போட்டி ஒன்றினையும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த போட்டியில் வெற்றிப்பெறுவோரின் புகைப்படங்களை தங்கள் விமானத்தில் சுமார் 40அடி அளவில் கேலி சித்திரமாக வரைய திட்டமிட்டுள்ளது. இதுகுறத்து அவ்விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பில் குறிப்பிட்டுள்ளதாவது....



  • 18-வயது நிறம்பியவர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.

  • கலந்துக்கொள்ள விரும்புவோர் தங்களுடைய அருமையான புகைப்படத்துடன், விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் நுழைய வேண்டும்

  • பதிவேற்றப்படும் புகைப்படத்தினை கேலி சித்திரம் வடிவில் காண்பிக்கப்படும், அவற்றில் ஒன்றினை தேர்வு செய்ய வேண்டும்.


இப்போட்டியில் வெற்றிப்பெறும் 6 பேரின் புகைப்படங்கள் விமானத்தில் ஒட்டப்படும். மேலும் இரண்டு முறை அந்த விமானத்தில் அவர்கள் பயணிக்கும் வகையில் இலவச விமான சீட்டுகளும் வழங்கப்படும்.


இந்த பயணமானது, ஜிம்பாபவே, ஜாம்பியா, நம்பிபியா, கென்யா போன்ற இடங்களை வளம் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்போட்டியில் கலந்துக்கொள்ள கடைசிநாள் வரும் ஏப்ரல் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது.