இந்தியவின் உதவியை எதிர் பார்க்கும் சீனா
தென்சீன கடலில் உரிமை கோரும் விவகாரத்தில் சீனாவுக்கும், பிலிப்பைன்சிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்கும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து காள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்த மாநாட்டின் போது தென்சீன கடல் உரிமை பிரச்னையை எழுப்ப சீனா முடிவு செய்துள்ளது. இதில் மற்ற நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்து விடக்கூடாது என சீன விரும்புகிறது.
இதனால் இந்தியாவின் உதவியை நாட சீனா முடிவு செய்துள்ளது. 3 நாடுகள் பயணமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இயி, ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தியா வரவுள்ளார். இவர் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பின் போது தென்சீன கடல் விவகாரம் தொடர்பாக சீனா வலியுறுத்தும் என கூறப்படுகிறது. அணுஆயுத விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது, சீன படைகள் லடாக் பகுதியில் அவ்வப்போது ஊடுருவி வருவது உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியாவிற்கு எதிராக இருந்து வரும் சீனா, தற்போது தென்சீன கடல் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை நாட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது