தென்சீனக் கடல் பிரச்சனை அமைதி வழியில் தீர்வு:- அதிபர் பராக் ஒபாமா
தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு சீன அரசு செயற்கை தீவுகளை உருவாக்கி விமானப்படைத் தளங்களை அமைத்து வருகிறது. இதை கண்காணித்து அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறுப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வியட்நாமில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது:
இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் சிறிய நாடுகளை பெரிய நாடுகள் அச்சுறுத்துக் கூடாது.
தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்களும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடும்.
தென்சீனக் கடல் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் அமெரிக்கா விரும்புகிறது என தெரிவித்தார்.