ஊழல் வழக்கில் தென் கொரியா அதிபர் பார்க் கியூன் கைது
தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹே ஊழல் வழக்கு மற்றும் தனது பதவியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
சியோல் நீதிமன்றம் கூறியதாவது, "பார்க் கியூன் ஹே அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யவதற்கான பல நியாயமான காரணங்கள் உள்ளன. மேலும் அவருக்கு எதிரான ஆதாரங்களும் அழிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியது. மேலும் 20 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.