வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்'  நிறுவனம் ராக்கெட் மூலம் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது.'ஸ்பேஸ் எக்ஸ்' என்பது ஒரு விண்வெளிப் போக்குவரத்து வணிக நிறுவனம்.  இது 2002-ம் ஆண்டு பேபால் இணையதள பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தின் தொழில்முனைவர் எலான் மசுக் அவர்களால் தொடங்கப்பட்டது.  சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பின்பு இத்தகைய தொழில்நுட்பத்தை விருத்தி செய்தது இவர்களே ஆவார்கள். இது ஒரு தனியார் வணிக விண்வெளி நிறுவனம்.



விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனர் எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரனின் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் இந்த வாரம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  இந்த பயணத்திற்கான கவுண்டவுன் வருகின்ற புதன்கிழமை(செப்-15) தொடங்கவுள்ள நிலையில், இன்ஸ்பிரேஷன் - 4 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என்.9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாராகி வருகிறது.



மணிக்கு 27,300 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பயணம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR