டைட்டன் நீர்மூழ்கியின் கடைசி திக் திக் 48 விநாடிகள்! ஆராச்சியாளரின் Shocking Report!
விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை சுற்றி பார்க்க சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் கடலுக்கடியில் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து சிதறிய சம்பவம் உலகம் முழுவதும் பேசு பொருளானது. இந்நிலையில் அந்த நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் இறப்பதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மட்டுமே தாங்கள் இறக்கப் போவதை தெரிந்து கொண்டதாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆழ்கடல் ஆராய்சியாளர் ஒருவர் கூறியுள்ளார் இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரூ. 2 கோடி கட்டணம்
டைட்டானிக் கப்பல் கனடா அருகே உள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் 12500 அடி ஆழத்தில் மூழ்கி கிடைக்கிறது. அந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதற்காக டைட்டன் நீர்மூழ்கி ocean gate என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதில் பயணிக்க ஒரு பயணிக்கு 2 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 46 சுற்றுலா பயணிகள் இந்த நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்த்துவிட்டு திரும்பி உள்ளனர்.
மேலும் படிக்க | டைட்டானிக் பக்கத்திலேயே நொறுங்கி கிடந்த டைட்டன்! - ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்த சூழ்நிலையில் தான் கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவின் நியூ ஃபவுண்ட்லாந்து கடற்கரையில் இருந்து நான்கு பயணிகள் மற்றும் ஒரு பைலட் என ஐந்து பேருடன் டைட்டன் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் புறப்பட்ட ஒரு மணி நேரம் 45 ஆவது நிமிடத்தில் அதன் தகவல் தொடர்பு தாய் கப்பலுடன் துண்டிக்கப்பட்டது. இதில் 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருந்ததால் கப்பலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பின்னர் ஆழ்கடலில் சத்தம் கேட்டதாகவும் அது சோனார் கருவியில் பதிவானதாகவும் சொல்லப்பட்டது.
1600 அடி ஆழத்தில் விபத்து
பின்பு அடுத்த நாளே டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திலிருந்து 1600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறி கிடப்பது கண்டறியப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்தது. இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து சிதறியதாக ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்பட்டது.
மேலும் டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறும் போது அந்த தருணத்தில் என்ன ஏற்பட்டிருக்கும் என பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் ஆழ் கடல் ஆராய்ச்சியாளரான Jose Louis Martin என்பவர் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடிப்பதற்கு 48 முதல் 71 வினாடிகள் இருக்கும் போது தான் அதில் பயணித்த 5 பேருக்கும் அவர்கள் இறக்க இருப்பது தெரிய வந்திருக்கும் என்ற ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
என்ன நடந்திருக்கும்...?
முதலில் நீர் மூழ்கியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக நீர் மூழ்கி தன்னுடைய வேகத்தை இழந்திருக்கும். பின்னர் கருமையான அந்த இருட்டில் அவர்கள் இருந்திருப்பார்கள். இதைத்தொடர்ந்து நீர்மூழ்கி தனது நிலை தன்மையை தக்க வைத்துக் கொள்ள முடியாத கட்டத்திற்கு சென்றிருக்கும் அதனால் அது கடல் பரப்பை நோக்கி விழத் தொடங்கி இருக்கும். அதன் பிறகு தான் அது வெடித்து சிதறி இருக்கும் என Jose Louis Martin தெரிவித்துள்ளார். மேலும் அவரது கூற்றுப்படி நீர் மூழ்கியில் ஒரு சிறிய கசிவு ஏற்பட்டால் கூட சுமார் 620 km வேகத்தில் தண்ணீர் சென்று அதில் பயணித்தவர்கள் உயிரை பலி கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Ocean Gate
முன்பே டைட்டன் நீர்மூழ்கியில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது என பலரும் எச்சரித்த நிலையில் தற்போது ocean gate CEO Stocton Rush ஐ பலரும் வசை பாடி வருகின்றனர். அவரின் தவறே அவரது இறப்பு மட்டுமல்லாமல் மற்ற நான்கு பேரின் இறப்புக்கு காரணமாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மறுபடியும் ocean gate நிறுவனம் டைட்டானிக் கப்பலை பார்க்க வேண்டுமா டைட்டன் நீர்மூழ்கியில் வாருங்கள் என விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்ததை அடுத்து ocean gate இன் இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்.... பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ