இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான விரும்பத்தகாத பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பட்டது.


பதற்றம் காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.