பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கி வைப்பதாக இலங்கை அதிபர் உத்தரவு பிரப்பித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நவம்பர் 16-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிரப்பித்துள்ளார்.


இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரம சிங்கேயை அதிரடியாக நீக்கி புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.



இதனையடுத்து அவசரஅவசரமாக அதிபர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ரனில் விக்ரமசிங்கே தெரிவிக்கையில்... ராஜபக்சே நியமனத்தில் பல அரசியல் சிக்கல்கள் உள்ளது எனவும் தானே பிரதமராக நீடிப்பேன் என தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் தனக்கு போதுமான எண்ணிக்கை இருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை வைத்துள்ளார்.


இந்நிலையில் இலங்கையில் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இலங்கையில் மேலும் சச்சரவுகளை எழுப்பியுள்ளது.


இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை நிரூபிக்க 113 MP-க்கள் தேவை. ஆனால், சிறிசேனா-ராஜபக்சே கட்சிகளின் கூட்டணிக்கு மொத்தம் 95 MP-க்கள்தான் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 MP-க்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு 7 MP-க்கள்தான் குறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!