புதிய வரலாறு எழுதிய இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது...
15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. நடந்த முடிந்த தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இதுவாக அறியப்படுகிறது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் இம்முறை 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், இலங்கை தேர்தல் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் இது என கருதப்படுகிறது.
மேலும் இத்தேர்தலில் 50%+1 வாக்குகளை பெறுபவரே வெற்றி பெற்றதாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தேர்தல் முடிவும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வழக்கம்போன்று யாரும் 50% மேல் பெறமாட்டார்கள் என்ற ஊகம் நிலவிவரும் நிலையில், தற்போது 50%+1 வாக்குகள் என்ற அடிப்படையில் வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
35 வேட்பாளர்கள் களம் காணும் இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50%-க்கு அதிகமான வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றியை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலில் தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.