இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடி அந்நாட்டினை பொருளாதார பிரச்சணைகளில் சிக்க வைக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு 7 நாட்களில் முடிவு கட்டவுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேன ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் விஷேட மாநாடில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிபர் சிறிசேன திறம்பட செயல்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் தெரிவிக்கையில்... இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி என்பது உள்நாட்டு விவகாரம். எனவே அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் இதே நிலை நீடித்தால் பொருளாதார ரீதியில் இலங்களை பல பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும், என குறிப்பிட்டாள்ளார்.


மேலும் இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வு காண அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புடன் செயற்படவேண்டும். வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிலையில் எதிர்காலத்தில் இலங்கை தனது நட்பு நாடுகளுடன் எவ்வாறான நம்பிக்கையைப் பேணப்போகின்றது என்பது கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிட்ட அவர் அரசமைப்பின்படி சட்ட ரீதியான ஒரு அரசு அமைவதற்கு வலியுறுத்த விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்!