1970 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை தீவு தேசத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தனி தமிழ் நாட்டை அமைப்பதற்காக விடுதலை புலிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 ஆண்டுகாலம் ஆயுதப் போரின் போது இறந்த விடுதலை புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு இரண்டு இலங்கை நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.


விடுதலை புலிகளை (LTTE) நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.


விடுதலை புலிகள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த  வவுனியா மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா வியாழக்கிழமை தெரிவித்தார்.


"ஒரு பயங்கரவாதக் குழுவை நினைவுகூர முயற்சிக்கும் எவரும் சிவில் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவார்கள்" என்று அவர் கூறினார்.


இலங்கை (Srilanka) அரசாங்கத்திற்கு எதிராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு தனி தமிழ் நாட்டை அமைப்பதற்காக ஆயுதக் கிளர்ச்சியை வழிநடத்திய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தால் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டது.


2009 க்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26 ஐ ஹீரோ தினமாக கொண்டாடினர்.


மேலும் படிக்க | LTTEஐ பயங்கரவாத அமைப்பாகவே வைக்க UKவிடம் வலியுறுத்துகிறதா இந்தியா?


விடுதலை புலிகளின் தலைவர் இந்த நாளில் அவர்களின் போராட்டங்கள் குறித்து  உரை நிகழ்த்தினார்.


விடுதலை புலிகள் உடன் இலங்கை இராணுவம் நடத்திய போரின் போது நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.


இந்த போரின் போது குறைந்தது 100,000 பேர் இறந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன இலங்கை தமிழர்களுடனான போரின் போது பல்வேறு மோதல்களால் சுமார் 20,000 பேரை காணவில்லை.


மேலும் படிக்க | மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR