LTTEஐ பயங்கரவாத அமைப்பாகவே வைக்க UKவிடம் வலியுறுத்துகிறதா இந்தியா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை (LTTE) தொடர வேண்டும் என்று இந்தியா, இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2020, 01:22 PM IST
  • LTTEஐ பயங்கரவாத அமைப்பாகவே வைக்க UKவிடம் இந்தியா வலியுறுத்துகிறது
  • பயங்கரவாத அமைப்பு என்ற நிலையில் இருந்து மாற்றியதற்கு முதலில் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது
  • 2000ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து பட்டியலிட்டது
LTTEஐ பயங்கரவாத அமைப்பாகவே  வைக்க UKவிடம் வலியுறுத்துகிறதா இந்தியா? title=

புதுடெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை (LTTE) தொடர வேண்டும் என்று இந்தியா, இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகால கிளர்ச்சிக்கு காரணமான LTTE குழுவுக்கு தடை விதிக்க இந்தியா ஏன் கோரிக்கை விடுக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. 
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) ஆகியோரின் படுகொலைக்கு காரணமான அமைப்பின் மீதான தடைக்கு அவசியம் என்பது குறித்து, புதுடெல்லி "தகவல்களைப் பகிர்ந்து கொண்டது".

அக்டோபரில் பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் (POAC) குழுவை பயங்கரவாத அமைப்பு என்ற நிலையில் இருந்து மாற்றியதற்கு முதலில் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது இந்திய அரசும் தனது கோரிக்கையை விடுத்துள்ளது.

அந்த ஆணையம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கிய பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது. 

2000 ஆம் ஆண்டின் இங்கிலாந்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலை புலிகள் சேர்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து அமைப்பை, நீக்க வேண்டும் எனக் கோரி, 2019, மார்ச் 8ஆம் தேதியன்று பிரிட்டிஷ் உள்துறை, வெளியுறவுத்துறை செயலாளரின் முடிவை எதிர்த்து, LTTE  அமைப்பு மேல்முறையீடு செய்திருந்தது. 
LTTE  தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனை 2009ஆம் ஆண்டு  இலங்கை ராணுவம்  கொன்றது.

முன்னதாக, செவ்வாயன்று, WION செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தியாவுக்கான பிரிட்டிஷ் ஹை-கமிஷனர் ஜான் தாம்சன், "நாங்கள் இந்திய அரசுடன் நடத்திய தனிப்பட்ட உரையாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் நாங்கள் பல பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டோம். இந்திய அரசாங்கத்துடன் இந்த விஷயம் பற்றி வேறு கோணத்தில் ஆலோசிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

தீவு தேசமான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனி தமிழ் ஈழம் வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்து வந்தது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News