Sri Lanka crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் வீதியில் இறங்கி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது என அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தங்கினார். அதே நாளில் (புதன்கிழமை) தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு முறையான ராஜினாமா கடிதம் எதுவும் அவர் தரப்பில் இருந்து வரவில்லை. இந்நிலையில், சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கோத்தபய ராஜபக்சே ஜூலை 14 (வியாழன்) அன்று சிங்கப்பூர் சென்றடைந்தார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாள் மாலத்தீவில் தங்கியிருந்த அவர், தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலத்தீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அவர், சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் சவுதி அரேபியாவுக்கு செல்வார் என்று முன்பு தகவல்கள் வெளியாகிருந்த நிலையில், அவர் மேற்கொண்டு பயணம் செய்ய மாட்டார் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜபக்சே சிங்கப்பூரில் தங்குவாரா? அங்கிருந்து இலங்கை அரசை நடத்துவாரா அல்லது வேறொரு நாட்டுக்கு செல்லவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே முறையாக ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தால், இன்றிரவு பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நீதியரசர் முன்னிலையில் அதிபராக பதவியேற்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அவர் பதவி ஏற்கும் பட்சத்தில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடலாம் எனக்கருதி, இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க: Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?


ஏற்கனவே அதிபர் ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்ததால், அந்நாட்டு மக்கள் மாலத்தீவு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தற்போது ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளதால், அவர்களின் பயணம் குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தனிப்பட்ட முறையிலான பயணமாக அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்துள்ளார்கள். அவர் சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் எதுவும் கோரவில்லை மற்றும் அவருக்கு சிங்கப்பூர் அரசு சாபில் புகலிடமும் வழங்ககப்படவில்லை" எனத் தெளிவுப்படுத்தி உள்ளது. 


இலங்கையில் சில மாதங்களாக நீடித்துவரும் இந்தப் போராட்டம் காரணமாக, ஏற்கெனவே மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி, புதிய பிரதமராக ரணில் பதவியேற்றார். அதிபர் மாளிகையை கைப்பற்றிய அதேநேரத்தில் பிரதமரின் அலுவலகத்தையும் பொதுமக்கள் கைப்பற்றினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கு தீ வைத்தனர். தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகவும், பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பதவியேற்றால், அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ