இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோா் காயமடைந்து உள்ளனர்.


இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.  



மேலும் 2 இடங்களில் பிற்பகலில் குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2 போ் கொல்லப்பட்டதாக தகவல்கள் தொிவிக்கின்றன.  இதுகுறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். 


இதன் காரணமாக குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரையாற்றி உள்ளார்.  அப்போது தனது உரையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். விரைவில் இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.



மேலும் இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அமைதியாக இருக்கும்படியும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.