பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக்கூறிய இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா!
MMC Fernando Resigns: இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகல். இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ, அதானி குழுமத்துடனான எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய அறிக்கையால் இலங்கையிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, இன்று எம்.எம்.சி. பெர்னாண்டோ ராஜினாமா செய்தார்.
இலவச சபையின் தலைவர் எம் எம் சி பெர்டினாண்டோ எனக்கு வழங்கிய ராஜினாமா கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன். "இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்" என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதானி குழுமத்திடம் காற்றாலை மின் திட்டத்தை ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ இலங்கை நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழுவில் (COPE) தெரிவித்த கருத்தை அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு, ஃபெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR