திருப்பதியில் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்திய இலங்கை பிரதமர்!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மனைவி, சில நாடாளுமன்றக் குழுவினருடனும் திருப்பதியில் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தார்!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மனைவி, சில நாடாளுமன்றக் குழுவினருடனும் திருப்பதியில் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தார்!
நேற்றைய தினம் திருப்பதி வந்தடைந்த இலங்கை பிரதமர், இன்றையதினம் அதிகாலை சுப்ரபாத வேளையில் ஏழுமலையான் எனப்படும் வெங்கடாஜலபதியை தரிசித்தார்.
கோவில் முன் வாசல் வழியாக சென்ற இலங்கை பிரதமரை, திருமலா தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
தொடர்ந்து சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான உயர் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ரணில் விக்ரமசிங்கே தம்பதிக்கு வேத ஆசி வழங்கினர். இதற்கிடையில் ஆலயத்தில் எடைக்கு எடை பரிகாரம்(துலாபாரம் நேர்த்திக்கடன்) பிரதமர் ரணிலால் நிறைவேற்றப்பட்டது. பரிகாரத்திற்கு பின்னர் அவருக்கு பட்டு பரிவட்டம், பிரசாதம், தீர்த்தம் ஆகியவற்றை கோவில் நிர்வாகிகள் அளித்தனர்.
பின்னர், திருமலையில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா சென்ற ரணில் விக்ரமசிங்கே தம்பதியர் விமானம் மூலம் சென்னை வழியாக கொழும்பு சென்றடைந்தனர்.