Hollywood Strike: ஊதியம் குறைவு மற்றும் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 11 வாரங்களுக்கு முன் வேலையை விட்டு வெளியேறிய எழுத்தாளர்களுடன் ஆயிரக்கணக்கான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். இதனால், அமெரிக்காவின் திரைப்பட தயாரிப்புத்துறையான ஹாலிவுட் 63 ஆண்டுகளில் அதன் முதல் பெரிய பணிநிறுத்தத்தைக் காண்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1 லட்சத்து 60 ஆயிரம் நடிகர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட்  (Screen Actors Guild) அமைப்பு இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏனென்றால், வால்ட் டிஸ்னி மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்டுடியோக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர் & டெலிவிஷன் தயாரிப்பாளர்களுடன் புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


1960இல் நடிகர் ரொனால்ட் ரீகன் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய பின்னர், ஹாலிவுட்டில் ஒரே நேரத்தில் இரு தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். ரொனால்ட் ரீகன் அதன்பின் அமெரிக்காவின் அதிபரானார் என்பது நினைவுக்கூரத்தக்கது. zeenews.india.com/tamil/photo-gallery/amy-jackson-boyfriend-ed-westwick-viral-photos-451544


மேலும் படிக்க | கடத்தப்பட்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வடகொரிய அதிபர்! கேள்விகளை எழுப்பும் படம்


எதற்கெல்லாம் பாதிப்பு?


நடிகர்களின் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத சுயாதீன தயாரிப்புகளைத் தவிர, அமெரிக்காவில் திரைப்படம் மற்றும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தும். "Stranger Things", "The Handmaid's Tale" போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது. மேலும், வேலைநிறுத்தம் தொடர்ந்தால், முக்கிய படங்களும் தள்ளிப்போகலாம்.


திரையரங்குகளின் கதி என்ன?


திரையரங்குகளில் திரைப்படங்களின் வருகை சீராக இருக்காது. ஏனெனில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும், மார்வலின் "Blade" மற்றும் "Thunderbolts" போன்று அடுத்தடுத்து ரிலீஸாக உள்ள படங்கள் திரையரங்கில் திரைக்கு வர வருவது தாமதாகும். 


மேலும் தொழிலாளர் பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்த படங்களின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இம்மாதம் வெளியாக உள்ள "Oppenheimer", "Barbie" படங்கள் ரிலீஸ் ஆவதில் எவ்வித பாதிப்பும் இல்லை. 


ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பற்றி என்ன?


நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் கொரியா மற்றும் இந்தியா போன்ற இடங்களில் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும். ஆனால் அவர்களின் ஹாலிவுட் தயாரிப்புகள் இடைநிறுத்தப்படும். அமெரிக்க பொழுதுபோக்கு துறையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நுகர்வோர் செலவினம் டிவி மற்றும் டிஜிட்டல் சந்தாக்களுக்குச் செல்கிறது.


ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் (SAG-AFTRA) அமைப்பில் டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை உள்ளனர். மெரில் ஸ்ட்ரீப், பென் ஸ்டில்லர் மற்றும் கொலின் ஃபாரெல் உள்ளிட்ட பிரபலங்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பகிரங்க அறிவிப்பை வெளியிட்டனர். 


மேலும் படிக்க | டைட்டன் நீர்மூழ்கியின் கடைசி திக் திக் 48 விநாடிகள்! ஆராச்சியாளரின் Shocking Report!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ