காவல்துறை அதிகாரிகளை வெளியேறச் சொன்ன விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தனது ஊழியர்களின் செயலுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மன்னிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி காலை பணிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 6 பேர், தங்களது பணியை தொடங்குவதற்கு முன்பாக  ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் காஃபி வாங்கி அதை குடித்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஸ்டார்பக்ஸ் ஊழியர் ஒருவர் 'காவல்துறை அதிகாரிகள் இங்கு நிற்பது வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஊழியரின் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டனர்.


இதனிடையே இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியது என, டெம்பே காவல் அலுவலர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும் தங்களது குடும்பத்தை விட்டு நாட்டிற்காக, தங்களது உயிரை கூட தியாகம் செய்யும் காவல்துறை அதிகாரிகளை அவமதித்த ஸ்டார்பக்ஸை புறக்கணிப்போம் என,  நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வந்தார்கள்.


இந்நிலையில் ஸ்டார்பக்ஸ் ஊழியரின் செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.