Year Ender 2021: இந்த ஆண்டின் தலைசிறந்த உலக சாதனைகள்! நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா?
நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் இவர்கள்.
புதுடெல்லி: 2021ம் ஆண்டின் இறுதி நாட்களில் இருக்கிறோம். இந்த ஆண்டை சற்று பின்னோக்கிப் பார்த்தால், பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சில அதிசயமாக இருக்கலாம். இரண்டும் கலந்தும் இருக்கலாம், பல வினோத நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.
சரி, உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர்.
26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் (Shortest Bodybuilder World Record) என்ற சாதனையை பதிவு செய்துள்ளா. 3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.
தண்ணீரில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சு விடமால் இருந்த சாதனை
குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான சாதனை (World Record) படைத்துள்ளார். புத்மிர் சோபத் (Budmir Sobat) என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு 24 நிமிடம் பிறகு 3 வினாடிகள் வரை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் தாக்குப்பிடித்த சாதனையாளராக இருந்த இவரின் சாதனை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
நாக்கால் மின்விசிறியை நிறுத்தி சாதித்த பெண்
ஜோ எல்லிஸ் (Zoe Ellis) என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை (FAN) நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.
7 வினாடிகளில் 10 முகமூடிகள் அணிந்து சாதனை
கொரோனாவின் வருகையால், முகக்கவசங்களை அணிய வேண்டியது கட்டாயமாக்கிவிட்டது. மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட முகக்கவசம் அணிவதில் ஜார்ஜ் பீல் சாதனை படைத்துள்ளார். முகத்தில் வேகமாக முகக்கவசம் அணிந்து சாதனை செய்தார். வெறும் 7.35 வினாடிகளில் 10 முகமூடிகளை முகத்தில் போட்டு உலக சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ஜார்ஜ்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் ஷார்ப் (Neville Sharp), 112.4 டெசிபல் ஒலி எழுப்பியதன் மூலம் பத்தாண்டுகள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
நெவில் ஷார்ப், சராசரி மின்சார துரப்பணத்தை விட சத்தமாக ஒலி எழுப்பினார். 45 வயதான நெவில் ஷார்ப், தனது மனைவியின் விருப்பப்படி இந்த வித்தியாசமான சாதனைக்கு விண்ணப்பித்து உலக சாதனை படைத்துள்ளார்.
Also Read | Year Ender 2021: இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான அற்புதமான மோட்டார்சைக்கிள்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR