லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாதவிச சம்பவங்கள் காரணமாக, இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புப் போடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் பகுதியில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


இந்த ஆண்டு லண்டன் மக்கள் அச்சமில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு பணியாற்றி வருவதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிக் அல்ட்வொர்த் தெரிவித்தார்.


இதைதொடர்ந்து, மோப்ப நாய்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளுடன் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்றும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.