இயற்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் உங்களை வாயடைத்து வியக்க வைக்கும். அதிர்ஷ்டவசமாக, கேமராக்கள் மற்றும் சமூக ஊடகதளங்கள் இருப்பதால், உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், இதுபோன்ற ஒரு வகையான நிகழ்வுகளைப் பார்த்து ரசிக்க உங்களை அனுமதிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பிரேசிலில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற இயேசு கிறிஸ்து சிலையான, 'Christ the Redeemer'சிலை மின்னல் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இந்த சிலையை மின்னல் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | Turkey earthquake: 90 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் குழந்தை!


இச்சம்பவம் நேற்று முன்தினம் (பிப். 10) ஆம் தேதி நடந்தது. சிலையின் தலையில் மின்னல் தாக்கியது. மின்னலின் படம் ட்விட்டரில் @Rainmaker1973 என்ற பயனரால் வெளியிடப்பட்டது. மனதைக் கவரும் படம் பெர்னாண்டோ பிராகா என்பவரால் பிடிக்கப்பட்டது. பதிவிட்டதில் இருந்து, இது 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது. இப்படத்தை 1,83,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.



மேலும், அந்த பதிவின் கீழ் கமெண்டுகள் நிரம்பி வழிகின்றன. அதில் ஒருவர்,"இந்த சமயத்தில் அது ஜீயஸ் அல்லது தோர் (மின்னல்களின் கடவுள்). நகைச்சுவை ஒருப்புறம் இருக்கட்டும், இது மிகவும் தொடர்ச்சியான நிகழ்வாகும், மிக உயர்ந்த புள்ளியாக இருக்கிறது. சரியான நேரத்தில் யாரோ புகைப்படம் எடுப்பது அதிர்ஷ்டம்".


பெரும்பாலான மக்கள் புகைப்படங்களை பாராட்டுவதில் ஆர்வமாக இருந்தபோதிலும், மற்றவர்கள் நகைச்சுவையாகப் பேசினர். "அதற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்தெழ வாய்ப்பே இல்லை" என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார். 


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள இந்த சிலையை ஒவ்வொரு ஆண்டும், சுமார் 20 லட்சம் மக்கள் பார்வையிடுகின்றனர். இச்சிலை கடந்த காலத்திலும் மின்னல் தாக்கியுள்ளது. 2014இல், மின்னல் தாக்கியதில் சிலையின் கட்டைவிரல் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கறுப்பின மக்களின் விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர் ; ஆப்ரகாம் லிங்கன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ