இந்தியாவிற்கும் வந்தது ட்விட்டர் ப்ளூ டிக்! மாதம் எவ்வளவு தொகை தெரியுமா?

 இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 9, 2023, 11:07 AM IST
  • இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா தொடங்கப்பட்டுள்ளது.
  • ட்விட்டர் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை ஆண்டுக்கு ரூ. 6,800 ஆகும்.
  • ப்ளூ டிக் பெற பயனர்கள் வெரிஃபைக்கு தங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவிற்கும் வந்தது ட்விட்டர் ப்ளூ டிக்! மாதம் எவ்வளவு தொகை தெரியுமா? title=

இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ சந்தா அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது, சில நாடுகளில் ட்விட்டரின் பிரீமியம் சந்தா முன்கூட்டியே அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்போது இந்தியாவில் உள்ள பயனர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணத்தில் ட்விட்டரில் மெம்பர்ஷிப் வாங்கலாம்.  வெரிஃபை செய்யப்பட்ட தொலைபேசி எண்களைக் கொண்ட சந்தாதாரர்கள் தங்கள் ப்ரொபைலில் தானாகவே நீல நிற சரிபார்க்கப்பட்ட பேட்ஜைப் பெறுவார்கள். முன்னரெல்லாம் ட்விட்டர் பயனர்கள் சரிபார்க்கப்பட்ட பேட்ஜுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.  இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது.

மேலும் படிக்க | 10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்

இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவரும் மெம்பர்ஷிப்பை வாங்கலாம்.  இணையவழியில் ட்விட்டர் ப்ளூ சந்தாவை பெற ட்விட்டர் அதன் பயனர்களை அனுமதிக்கிறது, இருப்பினும் ஆரம்பத்தில் இந்த வசதி இந்தியாவில் கிடைக்கவில்லை.  இணையம் வழியாக ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை மாதத்திற்கு ரூ.650 இன்று கூறப்பட்டுள்ளது.  அதேபோல வருடாந்திரத் திட்டத்தைப் பெற்றால், ட்விட்டர் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை ஆண்டுக்கு ரூ. 6,800, அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.566.67 ஆகும்.  ட்விட்டரில் ஒருவரது ப்ரொபைலில் இருக்கும் ப்ளூ பேட்ஜ் கணக்கு உண்மையானது என்பதை காட்டுகிறது.  இந்த பயனர்களின் ட்வீட்கள் மோசடிகள் மற்றும் ஸ்பேம்களை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ட்விட்டர் கூறியுள்ளது.  

ட்விட்டர் ப்ளூ பயனர்கள் ட்வீட்களை பதிவிட்ட 30 நிமிடங்களுக்குள் ஐந்து முறை வரை திருத்தும் செய்துகொள்ளலாம் மற்றும் அவர்கள் முழு-ஹெச்டி திறனில் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.  90 நாட்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே ட்விட்டர் ப்ளூ பெற பதிவு செய்ய முடியும், அனைத்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களும் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வெரிஃபை செயல்முறையை முடிக்க வேண்டும்.  சரிபார்க்கப்பட்ட பேட்ஜுடன் இருக்கும் உறுப்பினர்களும் ட்விட்டர் ப்ளூ சந்தாவைப் பெற வேண்டும் என்று ட்விட்டர் முன்பு கூறியது.

மேலும் படிக்க | OnePlus Cloud 11: வெளியானது OnePlus 11; விலை எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News