சூடான் நாட்டின் முன்னாள் அதிபர் உமர் அல் பஷீர் பாதுகாப்பு நிறைந்த கோபர் சிறையில் அடைக்கப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூடான் நாட்டை 25 ஆண்டுகளாக அண்ட முன்னாள் அதிபர் உமர் அல் பஷீர், கார்டோம் நாட்டில் உள்ள பாதுகாப்பு நிறைந்த சிறையான கோபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி முதல் உமர் அல் பஷீர்(75), அதிபராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உள்நாட்டுப் போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஆட்சிக்கு எதிராக பெருவாரியான மக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். 


இந்நிலையில், அந்த நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். அவர் பதவி விலகக்கோரி அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன. 


சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவாத் இப்ன் அவுப், கடந்த 11-ஆம் நாள் ராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இதனையடுத்து அந்நாட்டில் மேலும் பரபரப்பு அதிகரித்தது. 


ஆட்சியை கவிழ்த்த சூட்டோடு சூடாக ராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் அவாத் இப்ன் அவுப், ராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார். ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட உமர் அல் பஷீர் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. 


இந்நிலையில், தற்போது அவர் கர்ட்டோம் நகரில் உள்ள பாதுகாப்பு மிக்க கோபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.