ஐரோப்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 60 கிலோ எடையுள்ள கட்டியினை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐரோப்பாவை சேர்ந்த 38-வயது இளம்பெண் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அப்போது அவரது கர்ப பையில் நீர்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கட்டி அவரது செரிமான குழளின் மீது அமர்ந்திருந்ததால் அவர் உண்ணும் உணவு செரிக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தியுள்ளது.


பின்னர் அந்த கட்டியினை அகற்ற மருத்துவ குழு தீர்மானித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அப்போது அவரது வையிற்றில் இருந்து சுமார் 60 கிலோ எடையுள்ள நீர்கட்டி அகற்றப்பட்டது.


இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் வாங் அண்டிகெயன் தெரிவிக்கையில்... "ஆரம்பத்தில் அவரது வயிற்றில் இருக்கும் கட்டி சிறியாதாக தான் இருக்கும், சுமார் 15 கிலோவாக இருக்கலாம் எனவே கருதப்பட்டது, பின்னர் சிகிச்சையின் போதே அந்த கட்டியின் எடை சுமார் 60 கிலோ என கண்டறியப்பட்டது" என தெரிவித்துள்ளார்.


மேலும் இவ்வாறு நடப்பது அரிதான விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்ப்ப பைகளில் கட்டி சிறியதாக இருக்கும் போது நோயாளிக்கு அதற்கான அறிகுறிகளை காட்டிவிடும், ஆனால் இவருக்கு இவ்வளவு பெரியதாக வளரும் வரையிலும் ஏதும் காட்டமால் இருந்தது வியப்பளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.