Fuggerei Gated Colony: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு தான் சொந்த வீட்டின் அருமை தெரியும்.  சொந்த வீட்டில் இருப்பவர்கள் மட்டும் நிம்மதியாக இருந்துவிடுகிறார்களா என்றால் அதுவும் சாத்தியமில்லை. வாடகைக்கு வீட்டை விட்டு வாடகை வாங்குபவர்களுக்கும் வாடகைதாரர்கள் பற்றிய குறைகளும் கவலைகளும் இருக்கும். அதேபோல, வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும், வீட்டு முதலாளியின் மீதான குறைகளும் புகார்களும் அதிகமாகவே இருக்கும்.\


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எது எப்படியிருந்தாலும், குடியிருப்பதற்கான வீடு மற்றும் அதற்கான செலவு தான் மனிதர்களின் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது. உலகெங்கிலும் வாடகை என்பது பெரிய பிரச்சனையாக இருந்தால், அதிலும் குறிப்பாக நகரங்களில் வாடகை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கிறது.


வேலைக்கு செல்பவர்கள், வீட்டு வேலைக்கு செல்பவர்கள், கடைகள், பிற வசதிகள் என நகரத்தில் மக்கள் அதிகமாக வசிக்கும் நிலையில், நகரங்களில் தங்குமிட வசதிகள் குறைவாகவும், வாடகை அதிகமாகவும் இருக்கிறது. வருமானத்தில் முக்கியமான தொகை வாடகைக்கு செல்லும் நிலையில், வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.


மேலும் படிக்க | குடும்பத்திற்கே நல்ல நேரம்... கிரிக்கெட்டில் கலக்கும் 'கான்' சகோதரர்கள்...! 


ஆனால், தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வாடகை அதிகரிப்பு, குடியிருப்புக்கான செலவு பற்றி அங்கு வசிக்கும் மக்கள் கவலைப்படுவதே இல்லை.ஏனென்றால், ஏறக்குறைய 500 ஆண்டுகளாக,  வீட்டு வாடகை மாறவே இல்லை என்றால் அவர்களுக்கு கவலை எங்கிருந்து வரும்? இது ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம். இந்த குடியிருப்பும் நகரத்தில் தான் அமைந்திருக்கிறது. 


ஃபுகெரேய் குடியிருப்பு பகுதி


இந்த குடியிருப்பு பகுதியின் பெயர் ஃபுகெரேய் (Fuggerei) 142 குடும்பங்கள் குடியிருக்கும் இந்த சொசைட்டியில், வசிப்பவர்களுக்கு வாடகை அதிகரிப்பு என்ற பேச்சே கிடையாது. இதற்குக் காரணம் 500 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தம் தான். 


பெரிய வீடுகள், அழகிய முற்றங்கள், செடி கொடிகள் என அமைதியான இடமாக இருக்கிறது ஃபுகெரேய் . 500 ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை. ஆனால் இந்த இடம் இந்தியாவில் இல்லை ஜெர்மனியில் அமைந்துள்ளது என்பது சற்று வருத்தமான செய்தியாக இருந்தாலும், அப்படி என்ன உடன்படிக்கை? என்ற கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியாது.


சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் உருவாக்கப்பட்ட ஃபுகெரேய் காலனியின் வாடகை 500 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.


மேலும் படிக்க | உலக பணக்காரர்... எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட்.... 11வது இடத்தில் அம்பானி!!
 
Fugurei கேட்டட் காலனி 
1521 இல் கட்டப்பட்ட இந்த காலனியில் அமைந்துள்ள வீடுகளின் ஒரு ஆண்டுக்கான வாடகை வெறும் ஒரு அமெரிக்க டாலர் மட்டும் தான். இந்திய மதிப்பில் பேசினால் ஆண்டுக்கு  83 ரூபாய் என்றால், மாத வாடகை ஏழு ரூபாய் மட்டும் தான்.


சமூக வீட்டுத் திட்டம்  
Fuggerei என்பது ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் 1521 இல் கட்டப்பட்ட சமூக வீட்டுத் திட்டமாகும். இது . இதன் ஆண்டு வாடகை வெறும் ஒரு டாலர் என்பதுதான் சிறப்பு. இந்திய மதிப்பில் பேசினால் ஆண்டுக்கு ரூ.83 செலுத்த வேண்டும். அதாவது மாத வாடகை ஏழு ரூபாய்தான். பெரிய விஷயம் என்னவென்றால், கட்டணம் உயர்த்தப்படவில்லை.
 
1520 இல் ஜேக்கப் ஃபகர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த Fuggerei கேட்டட் காலனியில் 142 அடுக்குமாடி குடியிருப்புகளும் மொத்தம் 57 கட்டிடங்களும் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தின் தொடக்கத்தில் ஜெர்மன் வங்கியாளரான ஜேக்கப் ஃபுக்கர் என்பவரால் கட்டப்பட்ட இந்த குடியிருப்புத் திட்டம் ஆக்ஸ்பர்க்கின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்டப்பட்டது. எனவே ஃபுகர் அறக்கட்டளையால் பராமரிக்கப்படும் இந்த குடியிருப்புகளுக்கான வாடகையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இதுவரை வரவில்லை.


வீட்டின் விலையும் வாடகையும்
ஒரு வீட்டை வாங்குவது என்பது பணம் இருப்பவர்களால் முடியும் என்றாலும், எல்லோராலும் வீடு வாங்க முடியுமா என்றால் அது முடியாது. அதனால் தான் நலிவடைந்த மக்களுக்கான இந்த சமூக குடியிருப்பு திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட 
ஃபுக்ரே கேடட் காலனியில் அனைவருக்கும் வாடகைக்கு வீடு கிடைக்காது. 


இங்கு வாடகைக்கு வீடு கொடுப்பதற்கான கடந்த ஐநூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சில சிறப்பு விதிகளும் உள்ளன. ஆக்ஸ்பர்க்கைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் மட்டுமே இங்கு வாடகைக்கு வீடு எடுக்க முடியும். ஆனால், இதற்கு உங்கள் முன்னோர்கள் யார், உங்கள் வயது என்ன, உங்கள் குடும்பத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் தேவையில்லை.
 
வாடகைக்கு வீடு கொடுக்க விதிமுறைகள்


இந்தக் காலனிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பிரார்த்தனையில் பங்கேற்பது மட்டுமல்ல சமூக சேவை பணிகளை செய்வது என சமூகத்திற்கான பங்களிப்பையும் வாடகை குடித்தனக்காரர்கள் செய்ய வேண்டும். உதாரணமாக,  செக்யூரிட்டி காவலாளி, தோட்டத்தைப் பராமரிப்பது என பல்வேறுதரப்பட்ட வேலைகளில் வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டால் தான் வாடகைக்கு வீடு கிடைக்கும்.
 
இரவில் வந்தால் கட்டணம் செலுத்த வேண்டும்


குடியிருப்பினி வாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். அதன் பிறகு, இந்த காலனிக்குள் யாராவது வந்தால், அவர் காவலாளிக்கு 50 யூரோ சென்ட் கட்டணம் செலுத்த வேண்டும். நள்ளிரவில் வருபவர்கள், ஒரு யூரோ சென்ட் கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ