World's Richest Person List by Forbes: உலகின் முன்னணி பணக்காரர்களின் செல்வத்தில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் உலக பணக்காரர் (World's Richest Person) என்ற பட்டத்தை வென்றுள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், எலோன் மஸ்கின் சொத்து மதிப்பை விட மிகப்பெரிய அளவில் சொத்துக்கள் அதிகரித்ததன் காரணமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். சொத்து பற்றி பேசுகையில், பெர்னார்ட் அர்னால்ட்டின் நிகர மதிப்பு திடீரென 207.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
ஆர்னால்ட் மஸ்க்கை விட மிகவும் முன்னணியில் இருக்கிறார்
ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் படி, பெர்னார்ட் அர்னால்ட்டின் நிகர மதிப்பு 207.6 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அவரது செல்வத்தில் திடீரென 18.6 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அவர் எலோன் மஸ்க்கை விட முன்னேறியுள்ளார். மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால், அவரது நிகர மதிப்பு 204.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. அதாவது இரண்டு பில்லியனர்களுக்கு இடையே 2.9 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளது.
எலோன் மஸ்க் $30 பில்லியனுக்கும் அதிகமான சொத்தை இழந்தார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 வரை வருவாயைப் பற்றி பேசினால், 74 வயதான பிரெஞ்சு கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட் 7.25 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். மறுபுறம், 52 வயதான எலோன் மஸ்க் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை அவரது சொத்து $30.5 பில்லியன் குறைந்துள்ளது. இதற்கு முன்பும், பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.
மேலும் படிக்க | ஆசியாவின் டாப் 5 பணக்கார குடும்பம் பட்டியலில் இந்திய தொழிலதிபர்கள்!
இவர்கள்தான் உலகின் 10 பணக்காரர்கள் (ஃபோர்ப்ஸ் படி)
பெர்னார்ட் அர்னால்ட் - $207.6 பில்லியன்
எலோன் மஸ்க் - $204.7 பில்லியன்
ஜெஃப் பெசோஸ் - $181.3 பில்லியன்
லாரி எலிசன் - $142.2 பில்லியன்
மார்க் ஜுக்கர்பெர்க் - $139.1 பில்லியன்
வாரன் பஃபெட் - $127.2 பில்லியன்
லாரி பேஜ் - $127.1 பில்லியன்
பில் கேட்ஸ் - $122.9 பில்லியன்
செர்ஜி பிரின் - $121.7 பில்லியன்
ஸ்டீவ் பால்மர் - $118.8 பில்லியன்
உலக பணக்கரார் பட்டியலில் முகேஷ் அம்பானி
உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய கோடீஸ்வரரும், நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது ஆதிக்கத்தை தக்க வைத்து வருகிறார். Forbes Billionaires Index இன் படி, அம்பானியின் நிகர மதிப்பு $104.4 பில்லியன் ஆகும், இந்த எண்ணிக்கையுடன், அவர் உலகின் 11 வது பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர் ஆவார். மற்றொரு இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி 91.6 பில்லியன் டாலர்களுடன் 14வது இடத்தில் உள்ளார்.
கூடுதல் தகவல்
ஆசியாவின் பணக்கார குடும்பம் - ப்ளூம்பெர்க் பட்டியல்
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு வெளியிட்டுள்ள பட்டியலும், அம்பானி குடும்பம் இந்தியாவிலும் (India) ஆசியாவிலும் பணக்கார குடும்பம் என்ற இடத்தை பிடித்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 102.7 பில்லியன் டாலர்கள். அம்பானி குடும்பத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராக உள்ளார். இது திருபாய் அம்பானியால் நிறுவப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது இரண்டு மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி வணிகத்தை பிரித்து எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ