இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஓல்கா, ஹாண்ட்கேவ் வென்றனர்!
2018-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை போலாந்து எழுத்தாளர் ஓல்கா டோக்கார்ஷூ, 2019-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹாண்ட்கேவ் வென்றுள்ளனர்.
2018-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை போலாந்து எழுத்தாளர் ஓல்கா டோக்கார்ஷூ, 2019-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹாண்ட்கேவ் வென்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர். அந்த வகையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் போலந்து நாவலாசிரியர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கே இருவரும் இலக்கியத்தில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.
வியாழக்கிழமை ஸ்டாக்ஹோமில் உள்ள ஸ்வீடிஷ் அகாடமியில் ஒரு நிரம்பிய அறைக்குள், ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தர செயலாளர் மேட்ஸ் மால்ம் டோக்கார்ஸுக்கை 2018-ன் நோபல் இலக்கிய பரிசு பெற்றவராகவும், ஹேண்ட்கே 2019-ஆம் ஆண்டு வெற்றியாளராகவும் அறிவித்தார். “கலைக்களஞ்சிய ஆர்வத்துடன் எல்லைகளை கடந்து செல்வதை ஒரு வடிவமாகக் குறித்ததற்காக” டோகார்ஸுக்கும், “மொழியியல் புத்தி கூர்மை மூலம் சுற்றளவு மற்றும் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு செல்வாக்குமிக்க படைப்பிற்காக” ஹேண்ட்கேவுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு பெற்ற இருவருக்கும் அவர்களின் வெற்றி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மால்ம் கூறினார். ஹேண்ட்கே வீட்டில் இருக்கும் நிலையில், டோகார்ஸுக் ஜெர்மனியில் ஒரு வாசிப்பு சுற்றுப்பயணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.